பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


பொருந்திய ஊரையுடைய தலைவன் தேர் கொண்டுவர வந்த பரத்தையரான அணிகளைப் பூண்ட மகளிர் என் அழகினை இகழ்ந்து பேசுகின்றனர் என்பர்.

அது பாகன் நீண்ட காலம் உயிருடன் வாழ்தல் மிக்க சினத்தையுடைய கொல்லும் ஆண் யானை அவனைக் கொல்லாது விட்டு வைத்தலால் நிகழ்வதாகும்.

அம் மங்கையரும் மற்றவரும் பிறரும் பெண்மை நலம் சிறந்தவர் போன்று தலைவனிடம் செல்வதற்குக் காரணம். அப் பரத்தையர் தலைவன் காண மத்தளம் முழங்கும்படி துணங்ளைக் கூத்தாடிடும் திருவிழாவில் யான் அந்த இடத்துக்கு வாராதிருத்தலே ஆகும்.

யான் அங்கு வரின் ஞாயிறு செல்லும் திசையை நோக்கித் திரிகின்ற நெருஞ்சிப் பூவைப் போல் சுவர் எல்லாம் என் அழகை நோக்கியபடியே திரியுமாறு செய்வேன். ஆனால் வெற்றி பொருந்திய வேலையும் மழை போன்ற அம்பையும் முகில் போன்ற தோல் கிடுகையும் உடைய சோழ மன்னரிடம், விற்படை பொருந்திய அரணைக் கொண்ட வல்லம் என்ற ஊரின் புறத்தே உள்ள காவற் காட்டில் வந்து அடைந்த ஆரியரின் படையைப் போல், என் நேரிய சந்தினையுடைய திரண்ட வளையல்கள் உடைந்து சிதறுவனவாகும், என்று நயப்புப் பரத்தை இற்பரத்தையிடம் பக்கம் உள்ளார் கேட்பச் சொல்லினாள்.

217. பெரு நகையை உண்டாக்குகிறது

நகை நன்று அம்ம தானே - இறைமிசை மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, பெருஞ் செய் நெல்லின் பாசவல் பொத்தி, வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்