பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

157


கொன்றனன்.ஆயினும் கொலை பழுது அன்றே - அருவி ஆம்பல் கலித்த முன்துறை நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன மின் ஈர் ஒதி - என்னை, நின் குறிப்பே? - பரணர் அக 356 அருவி வீழ்தலால் ஆம்பல் மலர் தழைத்துள்ள நீர்த் துறையையுடைய நன்னனின் அழகிய பறம்புமலை போன்ற மின்னும் கூந்தலைக் கொண்ட தலைவியே கேள்:

மேலைத் துறையில் கள்ளையுடைய கலயங்களைக் கழுவுதலால் கீழ்த்துறையில் ஓடிவரும் கள்ளின் கலங்கல் நீரைப் பிளந்த வாயையுடைய ஆமை குடிக்கும்; சம்பங் கோழி இன்னியக்காரன் ஆக இறுகக் கட்டப்பட்ட தெளிந்த கண்ணை யுடைய இணைப்பறவை போல் ஆமை விளங்கும் இடம். இத் தகைய ஊரை உடைய தலைவன். அவன் நம் ஊர்த் தெருவின் நடுவில் என்னை எதிர்பாராதபடி கண்டு என் பொன் வளை யல் அமைந்த முன் கையைப் பிடித்துக் கொண்டான். அப் போது நான் தாயே எனக் கூவினேன். நீண்ட நாளாக வரும் விருப்பினை நீக்காமலேயே அவன் என்கையைவிட்டுவிட்டான்.

நன்னன் என்பவனின் பறம்பு மலையில் சாணைக் கல் செய்யும் தொழிலாளன் அரக்குடன் சேர்த்துப் பொருத்திய சாணைக் கல் போன்று வன்மையுடைய நாவினேன் ஆகிப் பேசாமல் அந் திகழ்ச்சியைத் தாய்க்குச் சொல்லவில்லை.

நல்ல தேரினையும் கடிய களிற்றையும் கொண்ட சோழ மன்னரின் வழி வந்தவனான நீண்ட நெற்கதிர்கள் விளையும் வல்லம் என்ற ஊரின் தலைவன் நன்மை உள்ளவனாக விளங்கவும் அவற்றைக் கருதாமல் அவனைப் பகைவர் பற்ற முயல்கின்றனர். அது கிடக்க, தழைத்த பலவான கூந்தலை உடையவளே! தம்மிடம் அருளின்றித் துன்பம் செய்தான் ஆயினும் அது குற்றம் உடையது ஆகாது. என்று பின்னின்று தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியைக் குறை நயப்பக் கூறினாள்.

219. அழுதபடி உள்ளாள் தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து,