பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், இரு நீர்ப் பரப்பின் பணித் துறைப் பரதவர் தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினை.இ, கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, இருஞ் சேற்று அள்ளல் ஏறி செருக் கண்டு, நரை மூதாளர் கை பிணி விடுத்து, நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன, நலம் பெறுபணைத் தோள், நல் நுதல் அரிவையொடு, மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை நீதற் பிழைத்தமை அறிந்து, கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே

- குடவாயில் கீரத்தனார் அக 366 தலைவ, தாழ்வான கிளைகளையுடைய மருத மரம் சிறந்த அழகு பெற்றிருக்கும் நீர் சூழ்ந்த அகலமான களம் பொலிவு பெற உழவர் வைக்கோற் போரைப் பிரித்துக் கடாவிட்டனர். அப்போது பறந்து போன துரும்புகள் முழுவ தும் உப்பளத்தில் உள்ள சிறிய பாத்திகளில் இடம் இல்லாத படி எங்கும் விழுந்து பரந்தன. ஆதலால். பெரிய கடற் பரப்பில் குளிர்ந்த துறையில் உள்ள இனிய வெண்மையான உப்பு கெட்டது. ஆதலால் துளையர்கள் சினந்து வயல் உழவருடன் மாறுபட்டு எதிர்த்துக் கை கலந்து மிக்க சேற்றுக் குழம்பினை ஒருவர் மீது ஒருவர் எறிந்து போரிட்டனர்.

அதனைப் பார்த்து, நரைத்த முதியவரான மருதநில மக்கள் போரிடும் அவர்களின் கைப் பிணிப்பை விலக்கிடு வர்; முற்றிய தேனான கள்ளின் தெளிவைப் பரதவர்க்கு அளித்திடுவர். அத்தகைய இடமான பொன்னணி அணிந்த “எவ்வி’ என்பவனது நீழல்’ என்ற ஊரைப் போன்ற அழ குடைய மூங்கில் போன்ற தோளும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையுடன், மணம் கமழும் சோலையில் தங்கி நேற்று நீ, தனக்குத் தீங்கு செய்தமையை உணர்ந்து எம் தெய்வம் போன்ற தலைவி அழுத கண்ணை உடையவள் ஆனாள்,