பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உ ை: த. கோவேந்தன் : 15

தண் துறை ஊரன் பெண்டிர், துஞ்சு ஊர் யாமத்தும், துயில்அறியலரே. - ஐங் 13 “செலவையுடைய நல்ல குதிரையின் தலையில் அணிந்த உயர்ந்த சாமரைபோல் கரையில் வளர்ந்த நாணல் வெண்மை யான பூக்களைக் கொடுக்கும். இத்தகைய குளிர்ந்த துறையை யுடைய ஊரனின் பெண்டிர் ஊரார் துயிலும் நள்ளிரவிலும் தாம் உறங்கார். ஆதலால் அவன் அவரை அறியாமல் வருவது யாங்ஙனம்? அஃது இயலாது” எனத் தலைவி தூதாய் வந்த வர்க்குக் கூறினாள்.

14. ஆற்றேன் ஆயினேன் கொடிப் பூ வேழம் தீண்டி, அயல வடிகொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் மணித் துறை ஊரன் மார்பே பணித் துயில் செய்யும் இன் சாயற்றே. - ஜங் 14 தலைவி, “நீண்ட மலர்களையுடைய நாணல் தீண்டுதலால் பக்கத்தே உள்ள வடுநிறைந்த மா மரங்களின் வளமான தளிர்கள் அசையும் நீலமணியைப் போன்று தெளிந்த நீர் நிரம்பிய துறையையுடைய ஊரன் கொடியவனே; ஆயினும், அவனது மார்பு ஒன்றே குளிர்ந்த உறக்கத்தைச் செய்யும் இனிய சாயலை யுடையது. ஆதலால் அதனை நான் நினைத்தே ஆற்றேன் ஆயினேன்!” என்று தன் தோழியிடம் உரைத்தாள். 15. ஊரன் ஆயினும் ஊரனா அவன்? மணல் ஆடு மலிர்நிறை விரும்பிய, ஒண் தழைப் புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரான் ஆயினும், ஊரன் அல்லன்னே. - ஐங் 15 தலைவி, “மணலை அலைத்தபடி வருகின்ற வெள்ளத் தில், விரும்பிய ஒள்ளிய தழையை உடுத்துப் புனலாடும் மகளிர்க்குப் புனை துணியினைச் செய்யும் நாணல் நிறைந்த மூதுரை யுடைய ஊரன் உறைதலால் தலைவன் நம் ஊரில் உள்ளவனே ஆயினும் புறத்தொழுகுதலால் ஊரன் அல்லாத வன். ஆனான்” என்று வருந்திக்சொன்னாள்.