பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 161

மறைந்து மெல்ல வந்து முகமனுரைகள் கூறிக் கரிய நீண்ட கூந்தலை உடைய மடவோளே! யானும் உன் சேரியில் உள்ளவளே! அயல் வீட்டுக்கு உரியவள். உனக்குத் தங்கை யாவேன் என்று சொல்லித் தன் கையின் மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் நெற்றியையும் கூந்தலையும் தடவிப் பகற்போதில் வந்து திரும்பினாள் உன் பரத்தை அவளைக் கண்டு, பாணன் என்பவன்ன் மற்போர் செய்தலில் வல்ல மார் பினது வன்மை மிகுதலால் வருந்தி அவனுடன் எதிர்த்துப் போர் செய்தலை விரும்பி மேற்கொண்ட திரண்ட முழவுத் தோள்கள் அப் பாணன் கையகப்பட்டு ஒழியக் கிடந்த வேறு வகையான கிடக்கையைக் கண்டு நல்ல போரில் வல்ல கணையன் என்பான் நாணம் கொண்டதைப் போல் நான் நாணம் கொண்டேன். என்று தோழி வாயில் மறுத்துத் தலைவியின் சிறப்புரைத்தாள்.

222. என் அழகை கொடு தொடுத்தேன், மகிழ்ந செல்லல் - கொடித் தேர்ப் பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், ‘அஞ்சல் என்ற ஆஅய் எயினன் இகல் அடு கற்பின் மிஞலியொடு தாக்கி, தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின், மார்பு தருகல்லாய், பிறன் ஆயினையே, இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினை.இ, ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் தொன்று முதிர் வட வரை வணங்கு வில் பொறித்து, வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! - பரணர் அக 396