பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & $65

நீ இங்கு வந்ததால் நின் அருளை யான் பெற்றோம். நீயும் அருள் செய்தாய். இதுவே போதும். இனி நீ விரும்பியவரிடம் நீ செல்வதை விரும்பிய பாகனும், பூட்டுதலை விடாத கடிய திண்மையான தேரை, நீ இவ்விடத்தில் காலம் தாழ்த்தினாய் என் எண்ணி அது நிற்கும் நிலையினின்று செலுத்துவான். அதற்கு முன்பே சென்று அப் பரத்தையரின் அன்பு கெடாமல் அதை நிலை நாட்டுவாயாக! என்று நெடிய ஊடலைக் கை விட்டுத் தலைவி தலைவனைச் சார்ந்தாள்.

224. என் நெஞ்சு தலைவனிடம் கார் முற்றி, இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து, சீர் முற்றி, புலவர் வாய்ச் சிறப்பு எய்தி, இரு நிலம் தார் முற்றியது போல, தகை பூத்த வையை தன் நீர் முற்றி, மதில் பொரூஉம், பகை அல்லால், நேராதார் போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன்நலத்தகை, எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் அலைத்த, புண், வடு, காட்டி, அன்பு இன்றி வரின் எல்லா! புலப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் கானின் கலப்பென் என்னும், இக் கையறு நெஞ்சே.

கோடு எழில் அகல் அல்குற் கொடி அன்னார் முலை மூழ்கி, பாடு அழி சாந்தினன், பண்பு இன்றி வரின் - எல்லா! ஊடுவென் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், கூடுவென் என்னும், இக் கொள்கை இல் நெஞ்சே. இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு நனிச் சிவந்த வடுக் கர்ட்டி, நாண் இன்றி வரின் எல்லா துணிப்பென் யான் என்பேன்மன்? அந் நிலையே, அவற் காணின், தனித்தே தாழும், இத்தனி இல் நெஞ்சே

என ஆங்கு பிறை புரை ஏர் நுதால் தாம் எண்ணியவை எல்லாம் துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே அறை போகும் நெஞ்சு உடையார்க்கு? -கவி 67