பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


168 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

கொண்டவர் அமைச்சர். அவர்களைப் போல் நூல் வல்ல ஆசிரியரால் பொல்லாத சொற்கள் இடையில் புகாமல் விலக்கிய தம் காதுகள் வயலாக, முன் உள்ள சான்றோர் உரைத்த செய்யுள்கள் தம் சொல்லை வளர்க்கும் நீராய், அறிவுடைய நா என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவரின் புதிய கவிகளைக் கூடியிருந்து கேட்டு உண்ணும் மதில் மதில் சூழ்ந்த நீரையுடைய மதுரை நகரத்தை உடையவனே!

‘நமக்கு மருதநிலத் தலைவன் ஆதரவானவன் அல்லன்’ என்று முதலில் சொல்லி, பின்பு ஒருவர் சொன்னதை ஒருவர் சொல்லாது ஒரூரில் குடியேற்றும் அளவுக்குத் திரண்டிருந்த நின் சேரிப் பரத்தையர் போல் நாங்களும் ஆகி, நமக்கு அவன் உறவல்லன், அவனை முயங்க வேண்டா என்று சொல்லி, தழுவக் கருதிய எம் தோளுடனே மாறுபட்டுப் பின்பு தழுவக் கருதிய எம் நினைவு கெடும் நெஞ்சம் கொண்ட நாங்கள் உன் பெண்டிர்க்கு ஒப்பாகி, ஊரன் ஊரனல்லன்’ என்ற சொல்லைக் களைந்து உன்னைக் காணக் குறியிடத்தே வந்து அங்கு உன்னைக் காணாததால் எம்மிடம் நீ வந்தாய் எனக் கருதி எம் இல்லத்துக் கதவை அடைந்து தட்டின கை வளையலால் தம் வருகையைத் தெரிவிக்கும் பரத்தையரை நாம் நொந்து கொள்வோமா? அதற்கு எங்களுக்கு உரிமை இல்லையே!

தாமரை அரும்பின் இயல்பு கொண்ட முலைகள் தழுவுத லால் தன் தன்மை கெட்ட நின் மாலை எம்மை இகழ்ந்து கூற, பூக்கூடையில் பயன்படாது தங்கிய மாலை போன்ற தன்மையுடைய யாங்கள் இற்பரத்தையர் ஊடின ஊடலைத் தீர்த்துத் தழுவாமல் அவர்களின் நலம் கெடும்படி அவர்களை இடையன் கொன்ற மரம் போல ஆக்கிவிட்டுச் சேரிப் பரத்தையரின் ஊடல் தீர்ப்பவனின் மார்பு என்று ஊரவர் கூறுவர். அவ்வாறு பிறந்த சொல்லை நொந்து கொள்வோமா? அதற்கு எமக்கு உரிமை இல்லையே!

ஆரவாரம் கொண்ட மனையில் எழும் ஆரவாரத்தைக் கேட்டு ‘நீ மணம் செய்கின்ற இல்லம், என்று எம் வீட்டிலே ‘விளங்குக, விளங்குக’ என்று கூறிப் புகுந்தான் புலைத் தொழிலையுடைய பாணன். அவனைக் கண்ட நாங்கள், சேரியில் எல்லாம் சென்று நீ போயிருக்கும் வீட்டை