பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 169

வினவிய வனாய்த் தேருடன் திரிகின்ற பாகனைக் குறை சொல்வோமா? சொல்லோம் அதற்கு எங்கட்கு உரிமை இல்லையே!

எம் இல்லத்தில் நீ ஒரு காலத்தில் வந்தாய் எனின், உன்னைப் பெற்று மகிழ்ந்து நீ பிரிந்து போனபின் எம் தோள் மெலியும்.அதனை உணர்ந்தவர்கள் இந்தக் காலத்தில் இவளும் இவரும் இப்படியிருந்தனர்’ என்று புறம் சொல்லுத லால் அதனை நான் ஏற்றுக் கொண்டு பழைய நிலையை அடைவதற்கு விரும்பித் தழுவுவதைப் போல் நின் மார்பில் முயங்கினும் உண்மையில் வேறாக இருக்கும்.நீவிரும்பாத முயக்கம் எமக்குக் கனவில் கிடைக்கப்பெற்ற செல்வத்தைப் போன்று விளங்கும் என்று பரத்தையிடமிருந்து வந்தவனோடு ஊடிப்பின் கூடுகையில் தலைவி கூறினாள்.

226. வீழ்ந்தார் விருப்பற்றக்கால் எம்மையும் உள்ளுவாய்!

போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட தாது சூழ் தாமரைத் தனி மலர்ப்புறம் சேர்புகாதல் கொள்வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக, ஒதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், ஆய் தூவி அன்னம் தன் அணி நட்ைப் பெடையோடு மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர! தெள் அரிச் சிலம்பு ஆர்ப்ப, தெருவின்கண் தாக்கி, நின் உள்ளம் கொண்டு, ஒழிந்தாளைக் குறை கூறித் கொள நின்றாய் துணிந்தது பிறிதாக, துணிவிலள் இவள் என, பணிந்தாய் போல் வந்து, ஈண்டுப் பயனில மொழிவாயோ?

பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடு விட்டு, அவள் வரல் நோக்கி, விருந்தும் ஏற்றுக்கொள்ள நின்றாய் நெஞ்சத்த பிறவாக, நிறையிலள் இவள் என, வஞ்சத்தான் வந்து, ஈங்கு வலி அலைத்தீவாயோ?