பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து நின் தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே. என ஆங்குமெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல், எல்லாம் துயிலோ எடுப்புக - நின் பெண்டிர் இல்லின் எழிஇய யாழ் தழிஇ கல்லா வாய்ப் பாணன் புகுதராக்கால்! - கலி 70 பல மணிகளைப் போன்ற நிறங்களையுடைய மலர்களை யுடைய நீர் நிலை. அதில் தன் ஆண் அன்னத்துடன் விளை யாடும் பெண் அன்னம். அது அழகு மிக்க ஆண் அன்னத்தை அகன்ற தாமரை இலை ஒன்று மறைக்க அதனைக் காணாமல் விரைந்து கலங்கியது. அது மதியின் நிழலை நீருள் கண்டு அதைக் தனது சேவல் என எண்ணியது. அப்போது அதனைச் சேர்வதற்கு எதிரே வரும் ஆண் அன்னத்தைக் கண்டு மிகவும் நாணம் கொண்டது. பல மலர்களின் செறிவுக்குள் புகுந்து ஒளிந்து கொள்ளும். இத்தகைய பழன நிலம் சூழ்ந்த ஊரனே! நான் கூறுவதைக் கேட்பாயாக!

எம் நலம் கெடும்படி எம்மை விட்டு நீங்கிப் பின்பு ஒரு காலத்தும் வாராமல் கைவிட்டனை. அதனால் பல நாள்களும் உறங்காத கண்கள் வருத்தம் மிகுதியால் இருக்க இயலாது ஒரு நாள்படுக்கையையும் இடமாய்க் கொள்கை யால் இமை மூடுதலும் கூடும். ஆனால் அதை, இணைந்த மலரால் ஆன மாலையினுடைய கலைகள் எல்லாம் முழுவ தும் கற்று முதிர்ந்த பரத்தையர் நன்றென்று கொண்டாடு மாறு நாள்தோறும் மணம் செய்யும் மனைகளில் இருந்து முழங்கும் என் மணத்தை எங்கட்கு உணர்த்தும் முழவினது ஒசை வந்து போக்குகின்றது. இதுவே எங்கள் குறை.

நீ எம்மை நீங்குதலால் உறங்காமல் உள்ளன எம் கண்கள். எம் உடல் மகனைத் தீண்டுவதால் அவை உறங்கலும் கூடும். அதனை நின் இளமைப் பருவத்துக்கு ஏற்ற பரத்தையர் களை அவர்க்கென்று அமைக்கப்பட்ட பெரிய இல்லத்தில் கொணர்ந்து நின் சுற்றமான பரத்தையர் இருந்து பாடும் துணங்கைக் கூத்தில் எழுந்து வரும் ஆரவாரம் போக்கும். அதுவே எங்கள் குறை.