பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


புணர்ந்த நின் எருத்தின்கண் எடுத்துக்கொள்வது போலும் தொடி வடுக்காணிய? தணந்தனைன எனக் கேட்டு, தவறு ஒராது, எமக்கு நின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்கணங்குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய? என்று, நின் தீரா முயக்கம் பெறுநர்ப்புலப்பவர் யார்? - நீ வரு நாள் போல் அமைகுவம் யாம்; புக்கீமோ! மாரிக்கு அவாவுற்றுப்பிள் வாடும் நெல்லிற்கு, ஆங்கு, ஆராத் துவலை அளித்தது போலும், நீ ஒர் யாட்டு ஒரு கால் வரவு. - கலி 71 மேலே விரியும் கதிர் கொண்ட இளவளஞாயிறு அகன்ற வானத்தில் பரவ, விடியற் காலத்தில் இதழ்கள் முறுக்குண்ட தலைகள், அம் முறுக்கு நெகிழ்ந்த மலர். அதில் அழகிய தேனை வண்டுகள் எல்லாம் ஒன்றாய்க் கூடித் குடித்து அதனாலும் அமையாமல் மேலும் குடித்தற்கு அங்குச் சூழ்ந்து திரியும் செல்வம் மிக்க பொய்கை. அதில் வருத்தம் மிகுத லால் நீர்ப்பெருக்கு மாறாது விழுகின்ற கண்ணிர் காமமான தீயால் வற்றி அற்று அற்று விழுதலையுடையதாக ஒழுக, அந்த வருத்தத்தைக் கண்டு இனிதாக அமர்ந்த கணவன் தன் அடிகளில் விழுந்து இறைஞ்சி விரைந்து அருள்செய்த லால், சிறிதே மகிழ்ச்சி அடையவளின் முகம் போல், பசுமை யான இலைக்குள் நின்ற தாமரையினது தனியான மலர் தனக்கு வருத்தத்தைச் செய்யவும், பனி ஒரு பகுதியில் வடிந்து கொண்டிருக்க, மிகவும் அழகின்றி மலர் மலரும் குளிர்ந்த துறையை உடைய நல்ல ஊரனே! -

‘அவனுடைய பெண்டிர் உன்னை ஒழியப் பிறர் இல்லை’, அதை ஆராய்ந்து பார், என்று சொல்லித் தனக்குத் தெய்வமாகிய தேரைத் தொட்டு சூள் சொன்ன பாகன், அவன் தான் கொண்டு வந்த பரத்தையர் எல்லாரும் இருத் தற்கு அமைக்கப்பட்ட இல்லத்தில் விடப்பட்ட பரத்தையர் புலவியால் ஏற்பட்ட வடுக்கள் நாணம் இல்லாமையால் இவை இருக்க வேண்டும் என்று பரப்பி வைத்தலால் அவை