பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 181

மனக் கருத்து அருள் இன்றி வருத்துவதைக் கண்டிருந்தும் உன் பொய்ம் மொழியை மெய்ம்மொழியாய்க் கருதும் பரத்தையரும் பித்துக் கொண்டவர் ஆவார்.

முன்பகல் எல்லாம் ஒருத்தியிடத்தே கூடியிருந்து உச்சிக் காலம் எல்லாம் அவளைக் கைவிட்டுப் பலரிடத்துப் போய் மாலையில் கூடுவதற்கு வேறு சிலரை நாடும் உன் நெஞ்சமும் பித்து உடையது. -

சதங்கை, தண்டை சிறுமணிகள் கோத்த மாலையுடன் ஒலியெழுந்து ஆரவாரிப்ப, தொடியையும் பெரிய கண்ணையும் உடைய பரத்தையர்க்கும் அவர்கள் அகப்படுத்துவதற்குக் காரணமான வலை இது தேர்வென்று கூறி, ஊரவர் எல்லாரும் ஒரு சேரச் சிரிக்கும்படி திரியும் நின் தேரும் உன்னைவிடப் பெரியதாய்ப் பித்தேறியது. ஆனால் யான் பித்துடையவள் அல்லள் என்று ஊடினாள் தலைவி.

232. ஊடல் நீங்கியதற்குக் காரணம்

‘நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார், சீர் ஆர் சேயிழை ஒலிப்ப, ஒடும் ஒரை மகளிர் ஒதை வெரீஇ எழுந்து, ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி, அமர்க் கண் மகளிர் அலப்பிய அந் நோய் தமர்க்கு உரைப்பன போல், பல் குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யன்ஆயின், வதுவை நாளால் வைகலும், அஃது யான் நோவேன், தோழி நோவாய், நீ என எற் பார்த்து உறுவோய் கேள், இனித் தெற்றென:

‘எல்லினை வருதி, எவன் குறித்தனை? எனச் சொல்லாதிருப்பேனாயினி, ஒல்லென, விரிஉளைக் கலி மான் தேரொடு வந்த விருந்து எதிர்கோடலின், மறப்பல், என்றும்.