பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை உரை த. கோவேந்தன் : 183

மணம் செய்து கொண்ட, பின்பு: அவ் விளக்கமான தோற்றத்துடன் வருகின்றாய். எங்களை எத்தகையர் என எண்ணினாய் என்று புலந்து சொல்லி, மேலும் ஒரு சொல் சொல்லாமல் ஊடி இருப்பேனான்ால், அது நீங்கப் பரந்த கழுத்தின் மயிரையும் மனச் செருக்கையும் உடைய'குதிரை கள் பூட்டப்பட்ட தேரிலே ஏற்றிக் கொண்டு வந்த விருந்தினரை வரவேற்று எதிர்கொள்வதால் எந்நாளும் புலவியை மறப்பேன். • , ...

பரத்தையுடன் கூடிய முயக்கத்தால் வாடிய மலருடனே எம் வீட்டுக்கு வராதே எனச் சொல்லி, நான் ஊடல் கொண்டிருப்பேனாயின், அவன் பொய்ச் சூளுக்கு நாம் அஞ்சும் அச்சமே ஊடலை உணர்த்தும் வழியாகக் கொண்டு ஊடலை உணர்த்த வருவான். அவன் கூறும் அப் பொய் யாகிய சூளுக்கு அஞ்சி ஊடாமல் இருப்பேன்.

பரத்தமை உடையவனே, பகற் பொழுதெல்லாம் பரத்தையர் இல்லத்தில் தங்கினாய் என்று கூறி யான் அவனுடன் மாறுபட்டிருந்தால், அவன் தன் தந்தையின் பெயரைப் பெறும் முறையால் பெற்ற மகனைத் தழுவிக் கொண்டு பொய்யாக உறக்கம் கொண்டவன் போல் கிடந்து வருந்துவான். -

தோழியே, மலர் போன்ற கண்ணையுடைய மகளிர் கை செய்த நலத்தை கெடுக்கும் பொய்யில் வல்ல தலைவனின் பரத்தமையால், மனம் செய்து கொண்டு, மனையில் எல்லாம் அம் மங்கையர் ஊடலால் செய்த வடுக்களைக் காண முறைமையாயிற்றே என்று எண்ணி யான் வருந்தியிருப்பேன். நான் இவ்வாறாகவும், விருந்தினரை எதிர் கொள்வதாலும் அவன் பொய்யான சூளால் நமக்கு வருத்தம் உண்டாகும் என்று அஞ்சுவதாலும் பெறுவதற்குரிய அரிய மகனைத் தழுவிக் கொண்டு அவன் உறங்குவதைக் காண்பதாலும் என் நெஞ்சம் புலவியை முழுக்கத் தாங்காது. அவனிடத்து அது கெட்டுப் போகும். இதுவே யான் அடையும் துன்பம் என்று வேற்று மொழி கூறிய தோழிக்கு தலைவி ஊடற் காரணம் உரைத்தாள்.