பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


186.

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

234.தோயலம் எனல்.முடியுமோ!

இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பின், பிறிதுயாதும் -

துணை இன்றித் தளை விட்ட, தாமரைத் தனி மலர்; திருமுகம் இறைஞ்சினள், வீழ்பவற்கு இணைபவள் அரி மதர் மழைக் கண் நீர் அலர்முலைமேல் தெறிப்பபோல், தகை மலர்ப் பழனித்த புள் ஒற்ற, ஒசிந்து ஒல்கி, மிக நனி சேர்ந்த அம் முகைமிசை அம்மலர் அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர! கேள்: தண் தளிர்த் தக்ை பூத்த தாது எழில் நலம் செலக் கொண்டு, நீ மாறிய் கவின் பெறல் வேண்டேன்மன்உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து, நின் ப்ெண்டு எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின்? பொன் எனப் பசந்த, கண் போது எழில் நலம் செல; தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் என்னுழை வந்து, நொந்து உரையாமை பெறுகற்பின்? மாசு அற மண் உற்ற மணி ஏசும் இருங் கூந்தல் விசேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின்பெறல் வேண்டேன்மன் நோய் சேர்ந்த திறம்பண்ணி, நின் பாணன், எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்?

ஆங்க

‘கடைஇயநின் மார்பு தோயலம் என்னும் இடையும், நிறையும் எளிதோ - நிற் காணின், கடவுபு, கைத்தங்கா, நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு? - கலி 77 தனியான தாமரை மலர் இரண்டு சேர்ந்து விளங்கும்

முகைகளுக்கு நடுவே வேறொரு பூ சிறிதும் சேர்தல் இயலாது மலர்ந்தது தான் விரும்பியவனுக்கு அழகை யுடைய முகம் கவிழ்ந்து அழுகின்றவளின் கண்ணின் நீர், முலைகள் மேல் விழுவனபோல், அத் தாமரை மலர்கள் அழகையுடைய வயலில் உள்ள பறவைகள் வந்து தாக்கச் சாய்ந்து வளைந்து