பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188

தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

235. ஊடல் தீர்த்தவள் உரை பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை இன் மலர் இமிர்பு ஊதும் துணை பணர் இருந்தும்பி, உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்ப, புலந்து, ஊடிபண்புடை நல் நாட்டுப் பகை தலை வந்தென, அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பொன் குடை நீழற் பதி படர்ந்து, இறைகொள்ளும் குடி போல - பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான், மொய் தப இறை பகை தனிப்ப அக் குடி பதிப் பெயர்ந்தாங்கு, நிறை புனல் நீங்க வந்து, அத் தும்பி அம் மலர்ப் பறை தவிர்பு அசைவிடுஉம் பாய் புனல் நல் ஊர! ‘நீங்குங்கால் நிறம் சாய்ந்து, புணருங்கால் புகழ் பூத்து, நாம்கொண்ட குறிப்பு, இவள்நலம் என்னும் தமையோதான் எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப்புணர்ந்தமை கரி கூறும் கண்ணியை, ஈங்கு எம் இல் வருவதை? “சுடர்நோக்கிமலர்ந்து, ஆங்கே படின் கூம்பும்மலர்போல்,என் தொடர்நீப்பின், தொகும். இவள் நலம் என்னும் தகையோ தான்அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக, பிறர் கூந்தல் மலர் நாறும் மார்பினை, ஈங்கு எம் இல் வருவதை? பெயின்நந்தி, வறப்பின்சாம், புலத்திற்குப் பெயல்போல், யான் செலின்நந்தி செறின்சாம்பும், இவள் என்னும் தகையோதான் முடி உற்ற கோதை போல் யாம் வாட, ஏதிலார் தொடி உற்ற வடுக்காட்டி, ஈங்கு எம் இல் வருவதை? ஆங்கஐய அமைந்தன்று; அனைத்தாகப் புக்கீமோ, வெய்யாரும் வீழ்வாரும் வேறாக கையின் முகை மலர்ந்தன்ன முயக்கில் தகை இன்றே, தண் பனி வைகல் எமக்கு? - கலி 78

பல மலர்கள் உள்ள மருத நிலத்தில் உள்ள பசுமையான

தாமரையினது கண்ணுக்கு இனிய மலரை ஆரவாரித்துச் சென்று மொய்க்கும் துணையுடன் கூடியது வண்டு. பலரும் நீரை உண்ணும் துறையில் பூவைப் பெருகி வரும் நீர் சாய்க்க