பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

193


ஐய! எம் காதில் கனங் குழை வாங்கி, பெயர்தொறும் போது இல் வறுங் கூந்தல், கொள்வதை, நின்னை யாம் ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் தாது தேர் வண்டின் கிளை பட, தைஇது கோதை பரிபு ஆட காண்கும். - கலி 80 பாகனாகிய மகனே, நின்னிடம் அன்பு நீங்குவார் நீங்குக. உன்னைப் பெற்ற எம் கண் நிறைய அன்பு நீங்காத யான் உன் வரவைக் காணும்படி அருளி, மென்மையான தலையில் கிடந்து மின்னும் ஒளிவீசும் மூன்று வடங்களை உடையவனே, விளிம்பில் முத்தை அரும்பாக அழுத்திப் பவழத்தால் செய்த வட்டப் பலகை அமைந்து நிற்க நின்ற, கவள உணவை உண்ண அறியாத, கையால் செய்யப்பட்ட யானையை, நின் காலில் கட்டிய செச்சை என்ற அணி ஒலிக்க, வளைத்து முப்புரியாய் முறுக்கின. கயிற்றால் மெல்ல மெல்ல இழுத்து இங்கு வருவாயாக.

விளங்கும் மணிகள் ஆரவாரிப்ப அசைந்து அசைந்து நடக்கும் தளர்ந்த நின் நடையைப் பார்த்து மகிழ்ந்திருத்தல் எமக்கு இனியது ஆகும். அதுபோக உன் தந்தையிடத்து எங்கள் உள்ளம் என்று சொல்லி வளை கழன்று விழ நின்று வருத்தத்தில் தங்கும் மகளிரை யான் காணுமிடத்து அத் தோற்றம் இன்னாது. -

ஐய, விருப்பம் தரும் அழகை உடையவனாய் ‘அத்தா அத்தா என்று நீ கூறும் இனிய சொல்லைக் கேட்டு மகிழ் வுடன் இருத்தல் எமக்கு இனிதாகும். அது கிடக்க, உம் தந்தை, மகளிர் அழகு கெடுதற்கு அவர் நலத்தை உண்பதால் தளர்ந்த துன்பத்தைத் தரும் நோயை யாம் காணுமிடத்து அஃது இன்னாது.

ஐய! ‘திங்களாகிய குழந்தையே! நீ இவனுடன் விளை யாட வருவாயாக!’ என்று கூறி, அத் திங்களுக்கு உன்னைக் காட்டி மகிழ்வது எமக்கு இனிது. அதுபோக, உம் தந்தை அருளாமல் தமக்கு மனம் மாறுபடும் அருளைக் கை விட்ட மகளிரின் அல்குலில் உண்டாகும் பசப்பைக் காணுதல்

இன்னாது.