பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


194 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

ஐய! எம் காதில் உள்ள பொன்னால் செய்யப்பட்ட மகரக் குழை என்ற அணியை எடுத்துச் சென்று போய் எம்மிடத்தில் மீண்டும் வருந்தோறும் எம் பூ இல்லாத வெறும் கூந்தலில் உன்னை எடுத்து வைத்துக் கொள்வது உம் தந்தை மார்பில் பூந்தாதை உண்ணும் வண்டுக் கூட்டம் மொய்க்கும்படி கட்டிய பூ மாலையை அறுத்து விளையாடுவதற்காக, நீ அவ்வாறு விளையாடினால் யாமும் எமக்குப் பகையானவரிடத்து அவன் வைத்த அன்பு குறையக் காண்போம் என்றாள் தலை வனின் கூடா ஒழுக்கத்தை வெறுத்து மகனிடம் தலைவி.

238. புதல்வனை நோக்கி தாய் கூறல்

மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர, பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன், நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர, உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஒவா அடி தட்ப, பாலோடு அலர்ந்த முலை மறந்து, முற்றத்துக் கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா, ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் போல, வரும் என் உயிர்! பெரும விருந்தொடு கைதுாவா எம்மையும் உள்ளாய், பெருந் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற, திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப, மருந்து ஒவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றா, பெருந்தகாய்! கூறு சில. எல்லிழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து, ஆங்கே வாய் ஓடி, ஏனாதிப்பாடியம் என்றற்றா, நோய் நாம் தணிக்கும் மருந்த எனப் பாராட்ட, ஒவாது அடுத்து அடுத்து, அத்தத்தா என்பான் மான வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும், மற்று இவன் வாயுள்ளின் போகான்அரோ.