பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 தி. அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே, நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று, வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள் ஆங்கே, ‘அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் அவட்கு இனிதாகி விடுத்தனள் போகித் தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஒர் புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு கோல் தா நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா! வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும் பருந்து எறிந்தற்றாக் கொள்ளும்; கொண்டாங்கே, தொடியும் உகிரும் படையாக நுந்தை கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள், வடுவும் குறித்தாங்கே செய்யும், விடு, இனி; , அன்ன பிறவும், பெருமான் அவள்வயின் துன்னுதல் ஒம்பி, திறவது இல் முன்னி, நீ ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக் கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்; அமைந்தது, இனி நின் தொழில். - கவி 82 உலகம் வற்கடம் நீங்கும்படி மழை பெய்வதற்குக் கிழக்குத் திக்கில் எழுந்து கூதிர் காலத்தில் தோன்றிய முகில் போன்று, எம் முலை, பாலினால் விம்மும்படி நீ சென்ற காலம் மிகவும் நீண்டது எனக் கூறும்படி ஆயிற்று எனவே, தேவர் கோயில் வந்து பின் இவனுடன் நீ சென்ற இடங் களை எல்லாம் எமக்குச் சொல் என்றாள் தலைவி.

அதைக் கேட்ட தோழி, “நான் சொல்வேன் கூறுவதைக் கேட்டுக் கொண்ட பின் சினம் கெள்ளாதிருத்தலை உன்னிடம் வேண்டுவேன்.” என்று சொன்னாள்.

அதைக் கேட்ட தலைவி ‘உன்னைச் சினக்க மாட்டேன். நீ கூற வேண்டியவற்றைக் கூறுவாயாக!” என்றாள்

அதைக் கேட்ட தோழி, மடப்பத்தை உடைய சிறிய அறி வற்ற மகளிருடன் விளையாட்டுப் பொம்மையைக் கொண்டு விளையாடி, வேண்டியவாறே ஒழுகினான். அங்ஙனம் ஒழுகும் போது, இவனுடைய தந்தை விரும்பிய முதல் பரத்தையாகிய