பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


பரத்தையிடத்து நீ சேர்தலை விடுத்து, நீ செல்வதற்குத் தக்க இல்லிலும், அவன் நீங்குவானோ நீங்கானோ என்று ஐயம் கொள்ளாமல் உறுதியாய் நீங்கமாட்டான் எனத் துணிந்த பரத்தையர் இல்லத்திலும் செல்ல வேண்டா. எம்மைப் போல் செயலற்றவர் இல்லத்தில் செல்வதே அல்லாது வேறோர் இல்லத்தில் நீ செல்லாதே. இனி, நீ வெளியே போகும் தொழில் முடிந்தது” எனச் சொன்னாள். மகனை கோயிற்கு அனுப்பிய தலைவி வழியில் பரத்தியர் அவனுக்கு அணி செய்ய அதனைப் பக்கம் இருந்த தலைவன் கேட்பத் தலைவி

கூறினாள்.

240. வெந்த புண்ணில் வேல்!

பெருந் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை, பொருத்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர, இளையவர் தழுஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் விளையாடிக்கொண்டு வரற்கு எனச் சென்றாய், உளைவு இலை, ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவெல்லாம்

நீட்டித்த காரணம் என்?

கேட்டி - பெருமடற் பெண்ணைப் பிணர்த்தோட்டுப் பைங் குரும்பைக் குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கி, தளரும் பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண், அகல் நகர் மீள்தருவானாக, புரி ஞெகிழ்பு நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல், சாலகத்து ஒல்கிய கண்ணர், உயர் சீர்த்தி ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக் கால்கோள் என்று ஊக்கி, கதுமென நோக்கி, திருத்துஅடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால், ‘கண்ணும், நுதலும், கவுளும், கவவியார்க்கு ஒண்மை எதிரிய அம் கையும், தண் எனச் செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, இவ் இரா எம்மொடு சேர்ந்து சென்றிவாயால் செம்மால்