பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 201

நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த புலம்பு எலாம் தீர்க்குவேம் மன்’ என்று இரங்குபு, வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி, ஒள்ளிழாய் யான் தீது இலேன்.

எள்ளலான், அம் மென் பணைத் தோள் நூமர் வேய்ந்த கண்ணியோடு எம் இல் வருதியோ? எல்லா நீ தன் மெய்க்கண் அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி, முந்தை இருந்து மகன் செய்த நோய்த்தலை வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு தந்தையும் வந்து நிலை. - கலி 83 பெருஞ் செல்வம் நிலைபெற்ற மிக்க சோற்றை உடைய பெரிய இல்லத்தின் இரட்டையாய் வந்து கூடும் கதவைத் தொட்டு, நின்று, பிள்ளையை அனுப்பி விட்டுத் தனித்து யாம் வருந்தினோம். வருந்த, பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி விளையாடும் இடுமணல் பொருந்திய அகன்ற தெருவிலே பிள்ளையை விளையாடவிட்டு அழைத்துக் கொண்டு வரச் சென்றனை நீ இனிய பாலை யான் இம் மகனுக்கு ஊட்டாமல் அப் பால் மிகுதியாகச் சுரக்கும் அளவெல்லாம் பிள்ளை பால் உண்ணாதிருந்ததற்கு உன் மனத்தில் வருந்தாது காலம் நீட்டிய காரணம் யாது? என்று வினவினாள் தலைவி, தோழியை. -

அதன் காரணத்தைக் கேட்பாயாக. பெரிய மடலை யுடைய குடம் போல் திரண்ட இடத்தைக் கொண்ட சொர சொரப்பையுடைய பசுமையான குரும்பைக் கொடியால் கட்டிப் பின்னிய பின்னலை இழுத்து அதனால் இளைக்கும் சிறு பிள்ளைகளுக்கு நடுவே பெரிய மணி அழுத்திய தேரி லிருந்து அகன்ற மனையை நோக்கிச் செல்லலானான். வரிசை யாய்க் குவளை மலர்கள் மலர்ந்து காற்றில் அசைவன போல் சாளரங்களில் ஒதுங்கிப் பார்த்த கண்களை உடையவர், பரந்த மிக்க புகழையுடைய ஆலமரத்தின் கீழ் வீற்றிருந்த இறைவனின் மகனான முருகப் பெருமானின் திருநாளுக்குக் கால்கோள்