பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/204

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 203

நல் வாயில் போத்தந்த பொழுதினான், எல்லா கடவுட் கடி நகர்தோறும் இவனை வலம் கொளிஇ வா’ என, சென்றாய் விலங்கினைஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் யார் இல் தவிர்ந்தனை? கூறு.

நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போதுபோல் கொண்ட குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணுஉ, ‘இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல்நகர் வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர் தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன், மற்று, அவர் தம்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு, ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார், பிறன் பெண்டிர் ஈத்தவை கொள்வானாம், இஃது ஒத்தன், சீத்தை, செறு தக்கான் மன்ற பெரிது.

சிறு பட்டி, ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட, மோதிரம் யாயோயாம் காண்கு

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச் சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும் செறியாப்பரத்தை இவன் தந்தை மார்பில் பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை அறிஇய செய்த வினை.

அன்னையோ? இஃது ஒன்று. - முந்தைய கண்டும், எழுகல்லாத என் முன்னர், வெந்த புண் வேல் எறிந்தற்ற இது ஒன்று தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்கண் தந்தார், யார், எல்லாஅ இது? “இஃதுஒன்று என்ஒத்துக் காண்க, பிறரும் இவற்கு என்னும் தன் நலம் பாடுவி, தந்தாளா, நின்னை ‘இது தொடுக என்றவர் யார்?