பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


204 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

அஞ்சாதி, நீயும் தவறில்லை; நின் கை இரு தந்த பூ எழில் உண்கணவளும் தவறிலள்; வேனிற் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்? மேல் நின்றும் எள்ளி, இது இவன் கைத் தந்தாள்தான் யாரோ? என்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடையேன்! - கலி 84 “ஏடி நீநல்ல நம் இல்லத்து வாயிலினின்று சென்றபோதில் தெய்வங்களை உடைய கோயில்கள் தோறும் இவனை வலம் செய்வித்து வா என நான் உரைத்தேன்.நீயும் சென்றாய்.சென்ற நீ, நான் சொன்ன சொற்படி நடக்க வில்லை. மா மரத்தின் உயர்ந்த கொம்புகளின்று மிக்க காற்றால் அசைக்கப்பட்டமாம் பிஞ்சுகள் காம்பு முறியும். அவைபோல்,பால் மிகுதிப்பட்டதால் அதை மறைத்து நான் உள்ளங்கையால் அமுக்கித் தேய்க்க, அந்தக் கையின் அளவிலே நில்லாது விம்மிச் சுரந்த என் மெல்லிய முலையின் பால், குழந்தை உண்ணாமல், பாழாகப் போகுமாறு இவன் தந்தையரின் பரத்தையருள் எவர் வீட்டில் தங்கினாய்? கூறு” என்றாள் தலைவி.

“நீரில் இலையின் கீழ் மறைந்து நின்ற அழகிய இதழை உடைய தாமரை மலரைப் போன்று, கையில் எடுத்த பச்சைக் குடையின் கீழ் தோன்றும் நின் பிள்ளையைக் கண்டனர் பரத்தையர்.

‘யான் வருந்தும்படி என் மனத்தைக் கைக்கொண்டு பின்பு என்னை நினைத்துப் பார்க்காத நல்ல மகனல்லாத வன் தலைவன் பெற்ற மகன் இவனே என்று எண்ணினர். அகன்ற மனையின் வாயிலை விட்டு வெளியில் வந்தனர் தெருவில். இவனைத் தடுத்தாள். இவன் சுவரிடத்தே தங்கி னான். அதனால் பின்பு அவர்கள் தங்கள் தங்களுடைய அணிகளில் இவனது வடிவிற்கு ஏற்றவற்றைத் தேர்ந்து அணிவித்தனர்”. இவ்வாறு அப் பணிப் பெண் கூறினாள் அதைக் கேட்டாள் தலைவி. “தனக்கு அயலவனாயுள்ள தந்தையின் பரத்தையர் கொடுத்தவற்றை இவன் ஒருவன் பெற்றுக்கொள்வானாம்! இனி இவன் கைவிடப்படுபவன். உறுதியாய் இவன் சினக்கத் தக்கவனே” என்று தன் நெஞ்சுடன் கூறினாள்