பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 21

“அன்னையே! உண்ணும் நீர் கொள்ளும் துறையில் உறையும் தெய்வம் இவள் உற்ற நோக்குக் காரணம் என்று நினைத்தாயானால், குளிர்ந்த சேற்றை அலவன் தன் நடை யால் அழகு படுத்தும் ஊரன் பொருட்டு இவள் ஒளியுடைய தொடி நெகிழுமாறு தளர்ந்து மென்மையான தோள்கள் பசந்து வேறுபடுவது ஏன் கூறுவாய்?” என்று தோழி செவிலிக்கு அறத்தொடு நின்று தலைவிக்கும் தலைவ்னுக் கும் உள்ள காதல் உறவைச் சொன்னாள்.

29. மகள் மனவருத்தம் கொள்ளல் ஏன்?

மாரி கடி கொள காவலர் கடுக, வித்திய வெண் முளை களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇத், திதலை அல்குல் நின் மகள் பசலை கொள்வது எவன்கொல் - அன்னாய்? - ஜங் 29 தோழி, “அன்னையே, மழை மிகுந்த பெய்யவும் காவலர் நன்கு கர்த்தலைச் செய்யவும் சற்றும் அஞ்சாமல் வந்த, விதைத்த வெண்மையான முளைகளை அலவன் துண்டு படுத்தும் வயல்களையுடைய ஊரனின் மார்டை ஆர முயங்கி யும், பாம்பின் படம் பொருந்திய அல்குலையுடைய நின் மகள் பசலை அடைந்து வேறுபடுவது ஏன்?” எனச் செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றாள்.

30. அழகை இழப்பது ஏன்? வேப்பு நனை அன்ன நெடுங் கட் களவன் தண்ணக மண் அளை நிறைய, நெல்லின் இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் பெருங் கவின் இழப்பது எவன்கொல் - அன்னாய்? .

- ஜங் 30 “அம்மா, வேப்ப மரத்தின் பூவினைப் போன்ற நீண்ட கண்களையுடைய நண்டின் குளிர்ந்த அகமான மண் அளை நிறையும்படி நெல் தாளின் மிக்க பூ உதிர்ந்து கிடக்கும் ஊரன் பொருட்டு இவன் தன் அழகை இழப்பது ஏனோ’ என்று தோழி செவிலியை நோக்கிச் சொன்னாள்.