பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


226 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

யும் உண்டாகப் புணர்ந்தீர். பிரியாதீர். புணர்ச்சி நீடித்த இடையில் பிரிந்தீர். கூடுதலைத் தாரும்’ என்று கூறுவன போல், கரிய குயில்கள் அரும்பு அவிழ்ந்த மலர்களை உடைய கொம்யுகள் தோறும் அமர்ந்து இருந்து விடாமல் தம் பெண் பறவையை அழைக்கும் இளவேனிற் பொழுதில் மன்மதனுக்கு விருந்திடுதலைப் பொருந்த எதிர்கொண்டு மதுரை மகளிரும் அவர் கணவரும் வண்டுகள் ஒலிக்கும் சோலையில் சேர்ந்து விளையாட மிக்க விருப்பத்துடன் அணிகளை அணிவார். ஆதலால் பிரிதலும் புணர்தலுமான கூற்றால் நான் கண்ட கனவு உண்மையாகும்படி மனத்தால் எண்ணுவாயாக! என்று தலைவன் குற்றத்திற்கு வருந்தி தலைவியை இறஞ்சினான்.

250. தலைவன் கண்ட கடவுளர்

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய, தண்டாத் தீம் சாயற் பரத்தை, வியல் மார்பl பண்டு, இன்னைஅல்லைமன், ஈங்கு எல்லி வந்திய, கண்டது எவன்? மற்று உரை. நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டிவாயாயின் உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கடவுளர்கண் தங்கினேன். சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ கடவுண்மை கொண்டு ஒழுகுவார். அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன் ‘முத்து ஏர் முறுவலாய் நான் மணம் புக்கக்கால், “இப்போழ்து போழ்து” என்று அது வாய்ப்பப் கூறிய அக் கடவுள், மற்று அக் கடவுள் அது ஒக்கும். நாள் உள் அழுந்த தலை சாய்த்து நீ கூறும் மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை வாயாக யாம் கூற வேட்டிவாய் கேள், இனி. பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப, பறிமுறை நேர்ந்த நகாராக, கண்டார்க்கு இறு முறை செய்யும் உருவொடு நும் இல் செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?