பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/232

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 231

உசாவுவேன். அவ்வாறு உசாவுதற்கு நீ என்ன நல் வினையைச் செய்தாய்? இங்கு நிற்பாயாக’ என்று கூனியைப் பார்த்துக் குறளன் கூறினான்.

அதைக் கேட்ட கூனி, ‘அம்மாவோ! என இகழ்ந்து தன் மனத்துக்குள் கூறினாள். பின் “கண்ணால் பார்க்கும் தன்மை இல்லாத குறளாய்ப் பிறப்பதற்கு ஏதுவான முகூர்த்தத்தில் ஆந்தைப் பறவைக்குத் தன் பெட்டை ஈன்ற குஞ்சான - மகனே, நீ எம்மை விரும்புவேன் என்று மேலே போகாமல் தடுத்தாய். உன்னைப் போன்ற குறளாக இருப்பவர் என்னைத் தீண்டப் பெறுவார்களோ” என்றாள்.

அதைக் கேட்ட குறளன் “மாட்சிமைப்பட்ட கலப் பைக்குள் தைக்கும் கொழுவைப் போல் ஒரிடம் கூனாய் அமைந்து ஒரிடம் முன் பக்கமாக வளைந்த வலிய முறித்த விட்டாற் போன்ற நிறைந்த அழகால் என்னைப், பொறுக்காத காம நோயைச் செய்தாய். அதை நான் ஆற்றியிருக்க மாட்டேன். நீ அருளுவாயாயின் என் உயிர் உண்டு. இனி நின் நிலையைச் சொல்வாய்!” என்றான் குறளன்.

அதைக் கேட்ட கூனி, இவன் மனக் கருத்தைப் பாராய் என்று மனத்துள் சொல்லிக் கொண்டாள். பின் “சூதாடும் நெத்தப் பலகையை எடுத்து நிறுத்தியதைப் போன்று மங்கை யரைக் கூடும் முறையைக் கல்லாதவனே, மக்கள் இயக்கம் இல்லாத உச்சிப் பொழுதில் வந்த எம்மைக் கையைப் பிடித்து உன் இல்லத்தே வா என்று சொல்வதற்கு, ஏடா, நின் பெண்டிராய் இருப்பவர் சிலர் இருக்கின்றனரோ? சொல்வாய்!” என்று கூனியுரைத்தாள்.

அதைக் கேட்ட குறளன், “நல்லவளே, தலைக்கு மேலே யும் நடுவில்லையாய் வாள் போன்ற வளைந்த மூட்டுவாயை உடையவளே, உன்னை என் மார்பில் தழுவுவேன். தழுவின் என் நெஞ்சிலே அக் கூன் ஊன்றும். முதுகிலே தழுவு வேனானால் முதுகின் கூனானது கிச்சு கிச்சு மூட்டும். ஆதலால் கூடுதலே அல்லாது முயங்கவும் மாட்டேன். இனிப் பக்கத்தே சிறிது முயங்கும் படியாய் வருவாயாக’ என்றான்.

அதைக் கேட்ட கூனி, “சி கெட்ட தன்மையை உடைய வனே, எம்மைவிட்டுப் போ” என்றாள்.