பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் இ 241

போன்று இப்போது நடுவாக நின்று எம்மை இங்ஙனம் இகழ்கின்றனை. இவ் இகழ்ச்சியிடத்து நான் என்னை மிகவும் ஒறுத்துக் கொள்வேன். நீ எந்நாளும் அத் தன்மையுடைய வனாய் இருக்கின்றாய்!” என்று தலைவி சொன்னாள்.

அதைக் கேட்டான் தலைவன். “முத்தைப் போன்ற பல்லை உடையவளே, நம் வலையில் அகப்பட்ட ஒரு புதிய யானை இங்கு வந்தது, அதில் ஏறிக் காண்பதற்காக நான் தங்கினேன்.” என்றான்.

அதைக் கேட்டாள் தலைவி, நீ கூறியது பொருந்தும்,’ என்று தன் மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள். பின்பு அவன் கேட்ட, “அந்தப் புதிய யானை, ஒளியுடைய நெற்றி யில் இடப்பட்ட திலகமாய் விளங்கிய பட்டத்தையும் தொய்யில் எழுதப் பெற்ற முலையாகிய வெண்மையான கொம்பையும், தொய்யகம் என்னும் தலைக் கோலமான தோட்டையும், தாழ்ந்த மகரக் குழையாகிய வடித்த மணி களையும், திருவைப் பொறித்த தலைப் பணியாகிய கழுத்து மெத்தையினையும் உடையது. ஆகையால் அஃது அழ குடையது என்பதையும் மற்றவர் சொல்லக் கேட்டேன், அந்த யானை, சுண்ணமான நீற்றை அணிந்து நறிய கள்ளாகிய நீரை உண்டு, நல்ல மனைவாடலில் கதவு என்ற கம்பத்தைச் சார்ந்து அதனுடன் கட்டப்பட்டதே, தனக்குச் சங்கிலியாகக் கட்டுண்டு தன் அழகைக் காட்டி அதனால் ஒருவரும் நீங்கிச் செல்லாதபடி காலைத் தடுத்து வீழ்க்கும். அதுவே அல்லாது மற்றவர்க்கு வருத்தத்தைச் செய்யும் மென்மையான தோளாகிய கையால் வாங்கிக் கொண்டு தன்னைக் கண்டவரின் நலம் என்ற கவளத்தை முத்துப் போன்ற சிரிப்பையுடைய பல்லைத் திறந்து உட்கொள்ளும். அந்தச் சிரிப்பை முகத்தில் கொண்ட யானையை இன்று தான் நீ கண்டவன் போன்று எம்மைப் பொய்யாக்குவது என்ன பயனை உடையது?” எனத் தலைவி தலைவனைப் பார்த்துக் கூறினாள்.

ஏடா, தொடியை அணிந்த தோளாகிய மருமத்தே தழுவிக் கொண்டு பின்பு தத்தி ஏறினாய் நீ! (இது முயக்கத் தையும் புணர்ச்சியையும் உணர்த்தியது)