பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

‘உன்மீது கொண்ட விருப்பத்தால் எதிர்கொண்டு வந்து கூடிப் பின்பு வருந்தும் பரத்தையரின் மனையின் வாயிலே வழியாகக் கொண்டு போயினை. அங்கு அந்த யானையை அழகுண்டாகவும் நீ ஏறினாய்.

“உன்னை மிகாமல் சீர்மைப்பட நுகர்ந்த சிறு களிப்பை யுடைய அழகு பொருந்திய கண் அழும்படி நீ சில நாள் விட்டுப் பின்பு கூடினாய்.

(அளவை மீறாமல் மதம் பிறத்தற்கு வேண்டுவனவற்றை உண்ட, சிறு களிப்பையுடைய, மக்களின் அழகை உண்ப தற்குக் காரணமான கண்ணையுடைய யானையை நீருக்குள் விட்டு நீ ஏறினாய் என்ற ஒரு பொருளும் தோன்ற இது நின்றது)

“நீ சேர்ந்த சேர்ந்த இடங்களில் உள்ள அறல் தங்கிய கூந்தலையுடைய உன் பெண்டிர் எல்லாம் உன்னைச் சினவாத படி எம் வீட்டுக்கு வந்தாய். அதற்கு அந்தப் புதிய யானை நீ ஏறமாட்டாத பாகனாகும் படியாக உன்னைக் கடந்து மதம் கொள்ளும். அங்கு அதை அங்ஙனம் ஆக விடாது மெல்லக் காத்துக் கொள்வாயாக’ என்று தலைவி புலந்து தலைவனை மறுத்துச் சொன்னாள்.

255. புதுப் புனல் பாதுகாத்துக் கொள்! யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஒரும் புதுவ மலர் தேரும் வண்டே போல் - யாழ வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்மாட்டு மாட்டு ஓடி, மகளிர்த் தரத்தர, பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமைகாட்டிய வந்தமை கைப்படுத்தேன் - பண்டு எலாம் கேட்டும் அறிவேன்மன், யான். தெரி கோதை அம்நல்லாய் தேறியல் வேண்டும்பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன்?