பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

உன் பொய்யான பரத்தைமைக் குணத்தை நான் முன்னெல் லாம் கேட்டு அறிந்துள்ளேன். அதுவே அன்றி நாள்தோறும் நீ மணந்து கொள்ளும் விழாவால் உண்டாகிய அலங்காரத்தை என்னைத் தவிர மற்றவர்களுக்குக் காட்டுவதற்கு நீ இப்படி வருவாய் என்றும் தெளிந்துள்ளேன். எம் வீட்டில் புகுகின்ற நீ எமக்கு என்ன தன்மை உடையாய்?” என்று வினவினாள்.

அதைக் கேட்ட தலைவன் மாலையையும் அழகையும் கொண்ட நல்லவளே! நான் செய்யாதவற்றைப் பெரிதாக எடுத்துக் கூறுவது என்ன பயனை உடையது? தன்னிடத்தில் பொருந்திய மலர்கள் மிக்க நீர் மோதும் கரையையுடைய வையை ஆற்றின் நீரில் ஆடுதற்காகத் தங்கினேன். இதனை நீ தெளிதல் வேண்டும்” என்று தலைவன் தலைவியை நோக்கிச் செர்ன்னான்.

‘ஒஒ’ என்று வியந்து தலைவி தன் நெஞ்சுடன் கூறினாள். “நீ அங்கு நீராடினாய் என்றும் நான் கேட்டேன். நீ ஆடிய நீர்தான், அறல் நீண்ட தன்மையை உடைய நெறித்த மயிராக, அங்குத் துள்ளும் கயல்கள் சிறந்த அழகு பொருந்திய கண்ணாக, கருமை மலர்தல் பொருந்திய மணக்கும் மலர்களை உடைய சோலையில் நாணாகிய அரணை முறித்துப் பலரும் காணும்படி பகல் பொழுதில் வந்த புதிய நீரைப் பாணன் வாயிலாக ஊடலைப் போக்கி மாலைக் காலத்துக்கு முன்னர் போய் நீராடினாய்” என்று தலைவியுரைத்தாள்.

மேன் மேல் அன்பு செய்து காதலுடனே அந் நீரில் ஆடுவதால் வெளிப்படும் அலரை நான் அறிவேன் என அஞ்சி மறைந்து நடந்தாய் என்று மற்றவர் கூறவும் நான் கேட்டேன். அதுவே அல்லாது உடலை மறைத்த சினத்துடன் புருவம் என்ற திரையை இட்டு நின் ஒழுக்கத்தைத் தடுக்கும் படி வந்த, சிலம்பொலியால் ஆரவாரிக்கும் புதிய நீரில் நீ குளித்த அங்கு உன்னைக் கவர்ந்து கைக் கொண்டு இழுத்துச் செலுத்தக் கண்டவரும் உள்ளனர்” என்றாள் தலைவி.

அங்ஙனம் இழுத்த நீர் புகழ் அமைந்த தலைமையை உடைய நின் நீர்மையுடைய மனத்தை வாங்கிக் கொள்வ தால், அந்தப் புதிய நீர்ப் பெருக்கினின்றும் கரையேறுதற்கு இன்னும் கரை காணவும் இல்லை” என்றாள் தலைவி.