பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை உரை : த. கோவேந்தன்

பரிபாடல் மருதம் 258. வையையே குறையாக் காமம் தருக

நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்; நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ. மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ, மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும், மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை மேவிப் பரந்து விரைந்து வினை நந்தத் தாயிற்றே தண் அம் புனல். புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும் வகை சாலும் வையை வரவு. தொடி தோள் செறிப்பத் தோள்வளை இயங்கக் கொடிசேரா திருக் கோவை காழ் கொளத் தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்வு மழுக உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும் நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென வரைச் சிறை உடைத்ததை வையை, வையைத் திரைச் சிறை உடைத்தன்று, கரைச்சிறை அறைக எனும் உரைச் சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று. அன்று போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் ஈரணி அணியின் இகல் மிக நவின்று தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண் துணி புனல் ஆகத் துறை வேண்டும் மைந்தின்