பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

253


மகிழ்ச்சியால் மகளிர்க்கு உடல் பூரித்தலால் தொடிகள் தோளில் அழுந்த, தோளில் இட்ட வளையம் முன் கையில் வந்து மோதும். எழுதப்பட்ட தொய்யில் கொடிகள் ஒன்றுடன் ஒன்று கூடி கலந்து அழியும். மகளிரின் மேகலை வடங்கள் அற்று உதிர்ந்து அதனது நூல் வெளிப்பட்டுத் தோன்றும். திரண்ட ஒளியை உடைய முத்து மாலை கலங்கிச் சந்தனம் முதலிய பூசப்பட்டதால் ஒளி மழுங்கும். நகத்திலும் கன்னத்தி லும் ஊட்டப் பட்ட செம்பஞ்சுக் குழம்பு அழியும். முலை யில் பூசப்பட்ட குங்குமக் குழம்பு வண்டல் போல் படிந்து தோன்றும். தளிர் கொண்டு கட்டப்பட்ட படலை மாலையும் கூந்தலும் குளிர்ந்த சந்தனத்தை அழிக்கும். மங்கையர் மார்பி லும் ஆடவர் மார்பிலும் பொருந்திய அணிகலன்கள் தம்முன் கலந்து விளங்கும். மகளிரும் மைந்தரும் அழகிய அவ் விருவர் தம் உள்ளமும் அன்பால் ஒன்றுபட்டு அவர் தம் நிறையை உடைக்கும். அவை போல் வெள்ளம் மலை போன்ற அணை களை உடைத்தழித்தது. அந்த ஆற்றின் சிறகுகளான அலை களோ வையையாற்றின் கரையான காவலை உடைத்தது. அக் கரையை அடைத்தற்கு ஆள்கள் வருக என்று காவலர் உரைத்தனர். அவர் தம் சொல்லாகிய காவல் ஒலியுடன் பறை யும் ஒலித்தது. அவ் ஒலியுடன் கிளர்ந்து எழும் ஊராரின் ஆரவாரமும் எழுந்தது.

அங்ஙனம் ஊரார் கிளர்ந்து ஆரவாரம் செய்த அன்று, போர் செய்வதற்கு அணி வகுக்கப்பட்ட அணியில் களிற்றி யானைகள் அணி அணியாய்ச் செல்வதைப் போல், இந்த நீராட்டு விழாவின் பொருட்டு வகுக்கப்பட்ட வரிசையில், வரிசை வரிசையாகப் பெண் யானைகள் சிறந்து செல்லலால், அழகிய அணி அணிந்த அணிகலன்களையும் இளைய ஆட வரும் அவருக்கு இளையரான மகளிரும், கரை முதலிய வற்றை இடிக்கும் அந்த வையை யாற்றின் வெள்ளத்தினுாடு புகுவதற்காக அணிகலன்களை நீக்கி நீராடத் தக்க அணி களுடனே யானையின் பிடரியிலும், மெல்லிய நடையுடைய குதிரையின் மீதும், விளையாட்டுப் போரைப் பெரிதும் விரும்பினராய் நீராட்டு விழாவுக்குரிய தகுதி மிக்க தெளிந்த வையை நீரே விளையாட்டுப் போரை நிகழ்த்துதற்குரிய