பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


போர்க்களமாய்க் குறித்தனர். தமக்கு ஏற்ற துறையைத் தேர்ந்து கொள்ளும் விருப்புடன் ஒருவருக்கு ஒருவர் முற்பட்டுக் கூட்டம் கூட்டமான தூசிப் படைபோல் விளங்கிச் சென்றனர். உள்ளே இடப்பட்ட புழுகு நெய்யால் சிறந்த நீர் பாய்ச்சும் கருவி உடையவராய்ச் சென்றனர். அவர்கள் வெண்மையான நெட்டிகளால் செய்யப்பட்ட தெப்பங்களை உடையவராய், நிறம் ஊட்டப்பட்ட தேர்களை உடையவராய்ச் சென்றனர். செலவு தவிராத யானைக்கூட்டமும் குதிரைக் கூட்டமும் தம் தம் கதியில் செல்வதை ஒழிந்து அந்த ஒரே வழியில் செல்பவரை நெருக்கும்படியாய் மக்கள் சென்றனர்.

மேற்கண்ட வண்ணம் மதுரை மக்கள் ஆற்றங்கரையில் திரிந்தனர். இதனால் புறஞ்சேரியில் இருந்த இளைஞர் தாம் வெளியே செல்வதற்கும் அரிய நிலையை உடையவர் ஆயினர். எல்லாரும் ஒருவரை ஒருவர் முற்படச் சென்றனர். சென்று துறைகளில் இடம் பிடிக்க முயன்றனர் வலிமையற்றவர் ஆற்று நீரில் குதித்தாட அஞ்சினர். துறை துறையாய்த் துறை அருகில் நின்று நீராடலாயினர் மெலியவர் அல்லாதவர் புதிய நீரில் குதித்து நீர் விளையாடில் கூடலாயினர். அதனால் அவர்கள் அணிந்திருந்த பத்துத் துவர் முதலியன ஊறின நீரும் சந்தனம் முதலியவற்றின் குழம்பும் நறுமண எண்ணெ யும் சூடியிருந்த மலர்களும் மணக்குமாறு இந்த வையை யாறு விளங்கும். இதனால் வேதத்தை விரும்பும் அந்தணர் இப்படிப் பல்வேறு மணம் மணக்க ஒடும் ஆற்றின் தன்மையை உணர்ந்து மங்கையரும் ஆடவரும் பூசிய மணப் பொருள் களைக் கழுவிய அக் கலங்கல் நீரை ‘இது துய்மை இழந்து விட்டது என எண்ணி மருட்சியடைந்தனர். நீராடுதலும் குடங்கையால் நீர் அருந்துதலும் செய்யாதவராய்க் கலக்கம் அடைந்தனர்.

சூடிக் கழித்தலால் தம் நிறம், மணம் மாறிய மென்மை யான மலரும், ஆடவர் அணிந்த மாலைகளும், மங்கையர் அணிந்த மாலைகளும் கரையை இடித்து வருதலால் அந்தக் கரையில் உள்ள மரம் செடி கொடிகளின் வேர், தூர், காய் கிழங்குகள் ஆகியவற்றுடன் கீழ் மக்கள் குடித்து மிஞ்சிய பன்னாடையால் வடித்த கள்ளை வார்த்தலால் அதனையும்