பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 259

பெயலான் பொலிந்த பெரும் புனல் பல நந்த நலன் நந்த நாடு ஆணி நந்தப் புலன் நந்த வநதனறு வையைப புனல. நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய், ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு துளியின் உழந்த தோய்வு அருஞ் சிமைதொறும் வளி வாங்கு சினையமா மரம் வேர் கீண்டு உயர்ந்துழி உள்ளன. பயம்பிடைப் பரப்பி உழவர் களி தூங்க முழவு பணை முரல ஆடல் அறியா அரிவை போலவும், ஊடல் அறியா உவகையள் போலவும், வேண்டு வழி நடந்த தாங்கு தடை பொருது விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் பொது நாற்றம் உள்உள் கரந்த புது நாற்றம் செய்கின்றே செம் பூம் புனல். கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர் அவிழ்ந்த மலர் மீதுற்றென ஒருசார்மாதர் மடநல்லார் மணலின் எழுதிய பாவை சிதைத்தது என அழ ஒருசார்அகவயல் இள நெல் அரிகால் சூடு தொகு புனல் பரந்தெனத் துடி பட ஒருசார்ஒதம் சுற்றியது ஊர் என ஒருசார்கார் தூம்பு அற்றது வான் என ஒருசார்பாடுவார் பாக்கம் கொண்டென ஆடுவார் சேரி அடைந்தெனக் கழனி வந்து கால் கோத்தெனப் பழன வாளை பாளை உண்டென வித்து இடு புலம் மேடு ஆயிற்றென - உணர்ந்த உணரா ஒள் இழை மாதரைப் புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துணைந்து சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ பழன உழவர் பாய் புனல் பரத்தந்து இறு வரை புரையுமாறு இரு கரை ஏமத்து,