பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

267


பூ மேம்பாடு உற்ற புனை கரும்பின் சேம மட நடைப் பாட்டியர்த் தப்பித் தடை இறந்து தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும் ஏமுறு நாவாய் வரவு எதிர் கொள்வார்போல் யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல்.

ஆங்க, அணி நிலை மாடத்த அணி நின்ற பாங்காம் மடப் பிடி கண்டு வயக் கரி மால் உற்று நடத்த நடவாது நிற்ப மடப் பிடி அன்னம் அனையாரோடு ஆயா நடைக் கரிமேல் செல் மனம் மால் உறுப்பச் சென்று எழில் மாடத்துக் கை புனை கிளர் வேங்கை காணிய வெருயுற்று, மை புரை மடப் பிடி மட நல்லார் விதிர்ப்புற செய் தொழில் கொள்ளாது மதி செத்துச் சிதைதரக் கூம் கை மத மாக் கொடுந் தோட்டி கைந் நீவி நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து வாங்கி முயங்கி வயப் பிடி கால்கோத்துச் சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் இதையும் களிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும் திசை அறி நீகாணும் போன்ம்.

பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல் அருப்பம் அழிப்ப அழிந்த மனக் கோட்டையர் ஒன்றோடு இரண்டா முனதேறார் வென்றியின் பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர் தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை ஒன்றியும், உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம். காமம் கனைத்து எழக் கண்ணின் களி எழ ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பாரவர் நிலை கள்ளின் களி எழக் காத்தாங்கு அலர் அஞ்சி உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள் உள் பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக்