பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


நிறைந்த பெய்கையுடையது தலைவனது ஊர். அதனால் அவ்வூர்க்கு உரியவனான தலைவன், தான் தெளிவுபடுத்திய சொல்லைத் தேறியிருந்தவரின் மேனியைத் தன் பிரிவால் பொன் போன்ற பசப்பை அடையும்படி செய்கின்றான்” என்றான் தோழியிடம்

42. போற்றா ஒழுக்கம் புரிந்து கொண்டாள் மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள்கொல்லோயாணர் ஊர! - நின், மாண் இழை அரிவை? காவிரி மலிர்நிறை அன்ன நின் மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே. - ஐங் 42 “புதிய வருவாயை உடைய ஊரனே! சிறந்த அணிகளை அணிந்த நினக்கு உரியவளாகிய அரிவை காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கைப் போல் விரிந்த நின் மார்பை மிகவும் விலக்கத் தொடங்கினாள். அவள் கள்ளுண்ட களிப்பு மேலும் மேலும் மிக, மயக்கத்தை அடைந்தாள் போலும்!” எனத் தலைவியுரைத்தாள், தலைவனைப் பார்த்து.

43. பாணன் நின்னினும் பொய்யன்! அம்பணத்து அன்ன யாமை ஏறித், செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர! நின்னினும் பாணன் பொய்யன், பல சூளினனே. - ஜங் 43 “செம்புகளை ஒத்த ஆமைப் பார்ப்புகள் மரக்கால் போன்ற தாய் ஆமையின் மீது ஏறி உறங்கும் புதிய வருவாயை யுடைய ஊரனே! நின்னைவிட நினக்குத் துரதாய் வந்த பாணன் பல பொய்களைக் கூறுதலும் பல சூளுரை செய்த லும் வல்லவன் ஆவான்!” என்று தலைவி தலைவனைப் பார்த்துச் சொன்னாள்.

44. அறம் ஆவதைச் செய்க

தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு,