பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

மாலைப் போதில் மலையில் பெய்த மழையால் மறுநாள் காலையில் வையை ஆற்றிலே நீர் பெருகியது. பெருகிய அந் நீர் நில எல்லைக்குள், பசி முதலிய துன்பங்கள் குறைய, மலர்ந்த பல்வேறு மலர்கள் நெருங்கிய போர்வையுடன், ஆற்றில் முன் பண்டு நீர் இல்லாமையால் வறண்டு கிடந்து பெரிய மணற் பரப்பை மூடிக் கொண்டு, வரிகளையுடைய வண்டுகள் மொய்க்கப்பட்டு, அழகிய அரும்புகள் மலர்ந்து மா மரத்தின் காண்பதற்கு இனிய தளிருடன் வாழையின் இலைகளையும் மயக்கி, அளவிட இயலாத பல்வேறு ஒசை கள் ஒலிக்கவும், கரைக் காவலரை அழைக்கும் பறைகள் முழக்கும் படியும் போய் எல்லையற்ற கடலை அடைவதற்கு வந்தது.

அங்ஙனம் வரும் புதிய நீரில் மக்கள் புகுந்து ஆடுதற்குச் செல்லலாயினர். நீராடை உடுத்த சரணத்தை உடையவ ராய் ஆயினர். மேகலையான ஏணிப்படி காலை மிக இறுக்க மாகத் தாளிட்டுக் கொண்டனர். குருதியைப் போன்ற செவ் வரக்கின் நீரை வீசும் கருவிகள் முதலிய பலவற்றையும் கைக் கொண்டனர். முத்தைப் போன்ற நிறத்தையுடைய பணி நீருடன் கூடிய சந்தனத்துடனே பெட்டியில் மூடி எடுத்தனர். தாவுதலால் மேற்கொள்வதற்குரிய மிக்க பிடரி மயிரையும் உடைய பறவை போன்று விரையும் செலவையும் உடைய குதிரையையும், மிக விரைவாக நடந்தாலும் மேல் அமர்ந்தி ருக்க இனிதாக விளங்கும் பெண் யானையையும், பெயர் சொல்லி அழைக்கப்படுகின்ற அரிய எருதைப் பூண்ட வண்டியையும் கோவேறு கழுதையையும், ஆராய்ந்து பூட்டப் பட்ட குதிரை வண்டியையும், சுமத்தற்குத் தண்டு பொருந்திய பல்லக்கையும் அழகுபடுத்தினர். முறைமுறையாய் வந்து கூடி விரைந்து அவற்றின் மீது அமர்ந்தனர்.

மலரும் பருவத்தையுடைய மொட்டைப் போன்ற இயல்பு உடையவரும், நறுமணம் தங்குதற்கு இடமான புதிய மலர் வாய் விரிந்தாற் போன்ற பருவம் உடையவரும் ஆகிய இளைய மகளிரும், இடை இடையே நரை கலந்த விளங்கும் வயதினரும், முழுவதும் நரைத்த முதுமை மகளிரும் என்னும் கற்புடை மகளிரும் பரத்தையரும் ஆகிய முப்பருபத்து