பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

275


மதுவையும் அதில் வார்த்து அதை உண்ணச் செய்தனர். இங்ஙனம் நீர் விளையாடிய மகளிர், நீரில் ஆடியதால் மேலும் ஒளி பெற்றனர். அவர்தம் முகமும் முலைகளும் நீரால் புடையுண்டு மிகவும் சிவந்தன. அத்தன்மை கொண்ட நீராட லைத் தம் காதலரோடு ஆடியிருந்தும் பின்னும் அந் நீரினை ஆடும் விருப்பத்தால் வண்டுகள் மொய்க்கும் மணத்தால் சிறந்த ஐந்து காம அம்பினது அரத்தால் கூர்மை செய்யப் பட்ட வாயைப் பெரிதும் ஒத்து விளங்கின. t

மகளிர் இவ்வாறு நீராடினர். அப்போது நீராடாத மைந்தர் சிலர் நீராடலை விரும்பினர். வாழைத் தண்டை தழுவிக் கொண்டு தாவித் தாவிச் சென்றனர். மேலும் சிலர் அந் நீரின் அலை மேலும் நுரையின் மேலும் தாழம் பூவின் குளிர்ந்த தாதினைத் துவினர். சிலர் விரைவாக ஒடும் ஒடத்தில் ஏறி, விரைவாக ஒடும் நீர் ஓட்டத்துடனே ஒரு சேரச் செலுத்தினர். சிலர் விரைவாய் ஒடும் நீரின் எதிரே அதற்கு மாறாக எதிர் சென்று ஆடித் தம் உடலில் தோன்றிய களைப்பினால் அவ்வாறு எதிர்த்துச் செல்வதை விட்டு நீரோட்டத்தினோடு சேர்ந்து மெல்ல மெல்ல விளையாடினர். மற்றும் சிலர் மெல்லியரான மங்கையர் கட்டிய அழகிய தம் சிற்றில்லில் சமைத்த சிறிய சோற்றை இட, அதை உண்பதற்குக் கரையில் ஏறி ஏற்றனர். மற்றும் சிலர் தாம் கை ஏற்கும் போது இடுபவராய்ப் பின்பு இடாமல் மறுப்பவராய்த் தம்முடன் விளையாடச் சிறிய இடையையுடைய மகளிரின் பந்துகையும் கழங்குகளையும் இத்தகைய பிற பொருள்களையும் அவர்கள் அறியாத வண்ணம் கவர்ந்து ஒடிச் சென்று நீர் அருகில் நின்றனர்.

அதை அறிந்த மகளிர் அவரைத் தொடர்ந்து வாங்கச் சென்றபோது அழகிய கரையினின்று மகளிர் கைக்குச் சிக்காமல் நீருக்குள் பாய்ந்தனர். இவ்வாறு ஆடுதல் நிகழ்ந் தது. அதனால் வையை ஆற்றின் இனிய தன்மைகொண்ட புதிய நீர், ஒளி விடலால், வேலாலும் வாளாலும் வீரர் தம் பகைவருடன் மாறுபட்டு நின்று போர் செய்தலாலும் யானைகள் போர் செய்தலாலும் கலங்கி விளங்கும் போர்க் களத்தைப் போல் இருத்தலால் தெளிவற்றதாய் விளங்கியது.