பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 277

வறுமையுடைய புலவரின் யாசித்தற்கு ஏந்திய கைகள் நிரம்பும் படி பொன்னைச் சொரியும் நம் பாண்டிய மன்னனைப் போன்றே இந்த வையை யாற்றின் நீர், அப் பாண்டியனின் இறைமைத் தன்மையை உலகம் எல்லாம் பரவும்படி செய்து மேலும் அவன்தன் நாட்டில் உள்ள வயல்கள் தோறும் பொன்னையும் பரப்பும் செயல் என் றென்றும் மாறாமல் நிகழ்வதாகுக! o

தைந் நீராடல் விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப, எரி சடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து, தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர, வருடையைப் படிமகன் வாய்ப்ப பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்கு உப்பால் எய்த இறை யமன் வில்லின் கடை மகரம் மேவப் பாம்பு ஒல்லை மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த பொதியில் முனிவன் புரை வரைக் கீறி, மிதுனம் அடைய, விரி கதிர் வேனில் எதிர் வரவு மாரி இயைக என, இவ் ஆற்றால் புரை கெழு சையம் பொழி மழை தாழ நெரிதரூஉம் வையைப் புனல்.

வரையன புன்னாகமும் கரையன சுரபுன்னையும் வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் மனைமாமரம் வாள்வீரம் சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் தாய தோன்றி தீயென மலரா ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம் வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப் பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல் வயவர் அரி மலர்த் துறை என்கோ