பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


280

தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல் நீ உரைத்தி வையை நதி. ஆயிடை மா இதழ் கொண்டு ஒர் மட மாதர் நோக்கினாள் வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கிச் சாய் குழை பிண்டித் தளிர் காதில் தையினாள் பாய் குழை நீலம் பகலாகத் தையினாள் குவளைக் குழைக்காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு ஓர் பெண் பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளைப் பசுந் தண்டு கொண்டு கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே மல்லிகா மாலை வளாய். தண்டு தழுவாத் தாவு நீர் வையையுள் தண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க நேரிழை நின்றுழிக் கண் நிற்ப நீர் அவன் தாழ்விழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉத் தாய் அத் திறம் அறியாள் தாங்கி தனிச் சேறல் ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே சேய் உற்ற கார் நீர் வரவு. நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளித்தாய் என்மாரும், கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப்புல்ல விழுத் தகை பெறுக என வேண்டுதும் என்மாரும், பூ வீழ் அரியின் புலம்பப் போகாது யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும், கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக என்மாரும் - கண்டார்க்கத் தாக்கு அணங்கு இக் காளிகை காண்மின், பண்டாரம் காமன் படை உவள் கண் காண்மின்,