பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/282

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உ ை: த. கோவேந்தன் & 281

நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின், கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல் குரல் கொண்ட கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஒர்மின், பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெற பாடிக் கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடம் தண் தும்பியினம் காண்மின் தான் வீழ் பூ நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்மின். என ஆங்கு இன்ன பண்பின் நின் தைந் நீராடல் மின் இழை நறு நதல் மகள் மேம்பட்ட கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம் மறு முறை அமையத்தும் இயைக நறுநீர் வையை நயத் தகு நிறையே.

- நல்லந்துவனார் பரி பா 11 அகன்ற வானில் பரவும் ஒளியுடைய திங்களுடன் கூட்டப்படும் கார்த்திகையும் திருவாதிரையும் பரணியும் நாள்கள் முதலாய் அமைய, இவற்றின் பெயரால் இடபவிதி, மிதுனவீதி, மேடவீதி என வேறுபடுத்தப்பட்டுக் கூறப்படும். அம் மூவகை வீதியுள்ளும் ஒர் ஒன்று ஒன்பது நாள்களைக் கொண்ட மூவகை ஒரைகள்; அவற்றுள் வெள்ளிக் கோள் இடப ஒரையைச் சேர, பொருள்களை ஆராய்ந்து அறியும் புந்தி என்ற பெயர் கொண்ட மிதுன ஒரையில் நிற்க, கார்த்திகை நாள் உச்சமாக இருள் புலர்கின்ற விடியற்காலை உண்டாக, வியாழன் கோள் சனியின் இரட்டை இல்லங் களாகிய மகர கும்பங்களுக்கு மேலே உள்ள மீன ஒரையைச் சேர, இயமனைத் தமையனாக உடைய சனிக் கோள் தனு