பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 283

முழுவதும் நீரைப் பரப்பி உலகத்துக்குப் பயனை விளையச் செய்து காத்தனை, பின் தேய்பிறைப் பக்கத்தில் தேவர்க்கு உணவாகிய அம் மதியம் நாள்தோறும் தன் நிறைந்த தன்மை யினின்று நாள்தோறும் ஒரு கலை அழியும். அதைப் போன்று நின் நீர் வருவாய் சுருங்குதலால் நாளுக்கு நாள் சிறிது சிறிது வற்றி வரும் போதும் எட்டாம் திங்களின் அளவாதலன்றி அமாவாசை நாளில் திங்கள் முற்றும் தேய்ந்து ஒழிவது போல் நின்னிடம் நீர் முற்றும் வற்றிப் போய்விட்ட அத் தகைய நாளை இவ் உலகில் யார் கண்டவர்? எவரும் இலர் அதனால் நெடுந்தொலையைக் கடந்து மலைகளிலே ஊர்ந்து வந்த மாட்சிமையுடைய அணிகலன்களை உடைய வையை மகளே! நீ பெருகி வந்த நாளின் வருவாயே அன்றி நின் வற்றிய நாளின் வருவாயையும் இந்த உலகம் அடையும் பொருட்டாக வலி குறைந்து மெல்லச் செல்வாய்!

களவில் புணர்கின்ற காதலரையுடைய சிறந்த மயில் போன்ற மகளிர், அவர்கள் காம இன்பச் சிறப்புடைய கள வொழுக்கத்தை மேற்கொண்டு அக் கணவனின் இல்லத்தில் போய் அடங்கும். செய்கையைப் போல், நீரான செல்வப் பெருக்கையுடைய வையை மகளே! நீ தோன்றிய பெரிய மலையைவிட்டு நின் தலைவனின் இருப்பிடமான இல்லத் துக்குத் தனியே செல்லுதல் இழிவானதாகும். ஆதலால் ‘அங்குச் செல்லாதே’ என்று பார்த்தவர் உரைப்ப, எல்லை யற்ற நீண்டு அகன்ற கண்ணை உடைய தலைவியைத் தலைவன் உடன் அழைத்துக் கொண்டு படைக்கலங்களுடன் செல்ல, அவனை அத் தலைவின் சுற்றத்தார் அச் செயலை அறிந்து இடைச் சுரத்தில் போய் அவனுடன் போரிட்டுத் தடை செய்தாற் போன்று, வெற்றியையுடைய மதுரையில் உள்ள மாந்தர் இடையில் புகுந்து தடை செய்து நீராடுதற்கு ஏற்றது வையையாறு.

இனி அவ் வையை ஆற்றில் அணி அணியாய் நின்று நெட்டியாற் செய்த வெண்மையான வாளைச் சிலர் சுழற்றினர். சிலர் நெட்டியால் ஆன குந்தப் படையைக் கையில் கொண்டு நின்றனர். மகளிர் அமர்ந்த தேர்க்கு மகளிர் கோலைக் கைக் கொண்டு நின்றனர். மைந்தர் அமைந்த தேர்க்கு மைந்தர்