பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

289


வாச நறு நெய் ஆடி, வான் துகள் மாசு அறக் கண்ணாடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி வாச மணத் துவர் வாய்க் கொள்வோரும், இடு புணர் வளையொடு தொடு தோள்வளையர் கட்டு வடக் கழலினர் மட்டு மாலையர் ஒசனை கமழும் வாச மேனியர் மட மா மிசையோர் பிடிமேல் அன்னப் பெரும் படை அனையோர் கடு மா கடவுவோரும் களிறுமேல் கொள்வோரும், வடி மணி நெடுந் தேர் மா முள் பாய்க்குநரும், விரைபு விரைபு மிகை மிகை ஈண்டி ஆடல் தலைத்தலை சிறப்பக் கூடல் உரைதர வந்தன்று வையை நீர் வையைக் கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் நிவந்தது நீத்தம் கரைமேலா நீத்தம் கவர்ந்தது போலும் காண்பவர் காதல் முன் துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி ஒன்று அல பலபல உடன் எழுந்தன்று அவை எல்லாம் தெரியக் கேட்குநர் யார் அவை கில்லா கேள்வி கேட்டன. சிலசில ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்த அளந்து சீர் தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் அத் தக அரிவையர் அளத்தல் காண்மின். ‘நானாள்கொல் தோழி நயன் இல் பரத்தையின் தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி சேன வெளிநின் சிறந்தானோடு ஏறினாள்; நானுக் குறைவு இலள் நங்கை மற்று என்மரும், பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான் உவன் நானாள் அவனை இந் நாரிகை என்மரும்,