பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/292

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 291

அடிமேல் அடிமேல் ஒதுங்கித் தொடி முன்கைக் காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள் நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்மின்.

துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை உரையின் உயர்ந்தன்று கவின் போர் ஏற்றன்று, நவின்று; தகரம் மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று விசும்பு கடி விட்டன்று விழவுப் புனல் ஆங்க. இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் நன்பல நன்பல நன்பல வையை நின் புகழ் கொள்ளாது இம் மலர் தலை உலகே.

- நல்வழுதியார் பரி பா 12 காற்றினால் மோதப்பட்ட முகில் மின்னலையும் இருளை யும் மாறி மாறிப் பரப்பித் தன் இனத்துடன் போய் சைய மலையை அடைந்து அதனைச் சூழ்ந்து, இடை விடாமல் மழை பெய்தது. அப் பெயலால் காட்சிக்கு இனிய அந் நீர் மலைச் சாரலில் காற்றால் உதிர்ந்த பூக்கள் தன் மீது பரவி விளங்க, ஒளி விளங்கும் பொறியை உடையதும் கண்டவர் அஞ்சுவதுமான நாகப் பாம்பினது பெயர் கொண்ட அம் மலைச் சாரலில் உள்ள நாகமரம், அகில்மரம், சுரபுன்னை மரம், ஞெமை மரம், சந்தனமரம் ஆகிய இவை வருந்தும்படி செய்து, தகர மரம், ஞாழல் மரம், தேவதார மரம் என்பன வற்றைச் சாய்த்துத் தன்னுள் கொண்டு காற்றைப் போன்று விரைவாய் வரும் வருகை ஒரு பெருங்கடல் பொங்கி வருவதைப் போல் விளங்கியது.

அழகுடைய குளிர்ந்த நீரைப் பெற்ற வையை ஆறு மேல் உரைத்ததைப் போன்று மலர் பரக்கப்பட்டு வந்து மதுரையின் மதிலை மோதும் என்று கண்டோர் உரைத்தனர். அதைக் கேட்டனர் அந் நகர மக்கள். அவர்கள் மின்னலைப் போல் விளங்கும் அணிகலன்களை அணிந்து கொண்டனர்; பொன் தகட்டால் ஆன பூவான அணிகளைப் புனைந்து கொண்டனர்;