பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்


சந்தனச் சாந்தை மாற்றி, அகிற்புகையினாலாகிய சாந்தைத் தம் உடம்பில் மிகுதியாய்ப் பூசிக் கொண்டனர்; முகில் போன்ற தம் கூந்தலைக் குழலாக முடித்தனர்; அந்தக் கூந்தலில் வெட்டி வேறாம், விலாமிச்ச வேறாம் ஆகிய இரண்டுடன் கட்டப்பட்ட பல மலர் மாலையைச் சூடிக் கொண்டனர்; நீராடுவதற்குப் பொருத்தமான புடைவைகளை உடுத்திக் கொண்டனர். கட்டப்பட்ட கோக்கு வாயானே அழகுடைய தாகிய வடங்களைப் பூண்டனர்.

மகளிர் சிலர் கண்ணாடியின் அழுக்குப் போக நறு மண நெய்யைப் பூசிக் கற்பொடியிட்டுத் துலக்கினர். அக் கண்ணாடியில் தம் இயற்கையழகும் செயற்கை அழகும் ஆடவரைப் புணர்ந்ததால் உண்டான ஒளியும் விளங்க அவற்றைக் கண்டு களித்தனர்; ஐந்துமணத்தோடு கூட்டி இடித்த பாக்கினை வாயில் இட்டு மெல்பவர், ஆணி இடும் இரட்டை வளையலுடன் செறிக்கப்படும் தோள் வளையை உடையவர், கட்டு வடத்துடன் கால் மோதிரம் அணிந்தவர், தேன்சிந்தும் மாலையை யுடையவர், ஒர் ஒசனை தொலைவு மணம் கமழும் மேனியர். இத்தகைய இயல்புடையவராய் விளங்கிய அம் மகளிருள் சிலர் மெல்லிய நடையை யுடைய குதிரையின் மீது ஏறினர். பெரிய பெண் அன்னம் போன்ற சிலர் பெண் யானையின் மீது ஏறினர்.

ஆடவருள் சிலர் விரைவான நடையை உடைய குதிரை மீது ஏறிச் செலுத்துபவரும், மற்றும் சிலர் யானை மீது ஏறிச் செலுத்துபவரும் சிலர் தெளிந்த ஒசையை உடைய மணிகள் கட்டப்பட்ட பெரிய தேரில் பூட்டிய குதிரைகளை முட் கோலால் குத்திச் செலுத்துபவரும் ஆகி, விரைந்து விரைந்து மிக மிக நெருங்கிச் சென்றனர். வையை நீராடல் இடந் தோறும் இடந்தோறும் சிறக்குமாறும் மதுரையில் உள்ள மக்கள் எல்லாம் தன்னைப் புகழவும் வையை வந்தது. அந்த வையை வெள்ளத்தைக் காண வந்த மக்கட் கூட்டம் வையை யின் இரண்டு பக்கத்தும் அதன் கரையை ஒப்ப வந்து கூடியது. அந் நீர் வெள்ளம் கரைக்கு மேலே உயர்ந்தது. அந் நீர் தன்னைக் காணவந்த மக்களின் ஆசை வெள்ளத்தையும் கவர்ந்து கொண்டு பெருகியது போல் பெருகிற்று. அப்போது