பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

293


அந்த வையை ஆற்றில் நீராடும் துறையின் முன் நிறைந்த அணி அணியாக நின்ற மக்கள் பேசும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் பல பல ஒரே காலத்தில் எழுந்தன. யார் அம் மொழிகளை எல்லாம் போருள் விளங்கக் கேட்க வல்லவர்: அவற்றைக் கேட்க இயலாது. எம்மால் கேட்கப் பட்டவை சிலவேயாம்.

தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பிற்படாதவராய்க் கூத்தாடுதலில் அழகு பொருந்தத் தம்முள் ஒத்து விளங்கும் ஆடல் மகளிர், இசைக் கருவியினின்று இசை எழ, முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி என்னும் இக் கருவிகளின் ஒசையை யுடைய தாளத்தை அளந்து தம் நேரிய முன் கையால் தாளக்கை அளத்தலைக் காணுங்கள்.

தோழியே, கேட்பாயாக! ஒருத்தி நாணத்தில் குறை வில்லாதவளாய் இருந்தும் தனக்குச் சிறந்தவனான கணவன் நன்மையற்ற பரத்தையர் இல்லத்துக்குப் போய் அவரது தோளின் அழகை துய்க்கும் பொருட்டுத் தன்னை நீங்கிச் சென்றான் என்று அவனுடன் ஊடியிருந்தவள் புது வருவாயை யுடைய வையை வெள்ளத்தில் அந்த ஊடலையும் மறந்து பெரிய பெண் யானையின் முதுகின் மீது நீராடும் விருப்பத் துடன் தன் கணவனுடன் உயர ஏறினாள். அவள் நாணம் உடையவளோ என்று சிலர் கூறினார்கள்.

கூட்டத்தில் நின்றே ஒருவன் பூங்கொம்பைப் போன்ற ஒருத்தியின் குவிந்த முலைகளைக் கூர்ந்து பார்க்கின்றான். அவன் இளகிய நெஞ்சன்: திண்மை இல்லாதவன் என்று சிலர் இகழ்ந்தனர். இவன் இவட்குப் பண்டு மலர் முதலிய வற்றைக் கையுறையாகத் தந்ததும் இல்லை; காதல் மொழி பேசியது மில்லை. அங்ஙனமாகவும் வழியில் போகும் அயலான் ஒருவன் பின்னே தன் மனத்தைத் செலுத்தி மேனி பசலையூர நின்றாள்; யாம் காதல் கொண்டவிடத்தும் நிறை யழிவதற்கு அஞ்சி அதைக் கைவிட வேண்டாவோ? அவன் மங்கை அணிந்துள்ள முத்தாரத்தின் அழகை நோக்குபவன் போல் இவளுடைய நெருங்கிய முலைகளைப் பார்த்தான். இவன் அங்ஙனம் ப்ார்ப்பதனால் இவளும் நாணம் கொள்ள வில்லை எனக் கூறினான்.