பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


298 நீ அன்பொடு புணர்ந்த ஐந்தினை - மருதம்

மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் வறாஅற்க வையை நினக்கு.

- நல்லழிசியார் பரி பா 16

வையை ஆற்றில் வெள்ளமானது பெருகி வரும் வருகை யால் முகில்கள் பொருந்தும் மலையிடம் உள்ள மிளகி னோடும் சந்தன மரத்தினோடும், வெண்ணெய் உண்டாதற் பொருட்டுக் கடைவதற்குக் காரணமான தயிர் போல் விளங்கும் நுரையுடனும், மலர், பொன், மணி முதலிய மற்றப் பொருள்களோடும் அந்த நீர் பெருகியது. வையைக் கரையில் எங்கும், அப் பொருள்களை அச் செய்கை பாண்டியனின் கொடைத் தன்மையைப் போன்றது என்று கண்டோர் சொல்லும்படி, மேன்மேலும் வாரி வாரித் தன் அலைக் கைகளால் வீசிக் கரையை அழிக்கும். இனிப் பிற நீராடும் துறைகள் தோறும் வலமாகச் சுழித்துப் பாயும் கலங்கலை யுடைய அழகிய அந் நீர். ஆண்டுதோறும் நீராடுபவரின் தம்முள் ஒத்து முத்துச் சேர்ந்த வடம், தலைக்கோல முத்து, பொன்னால் இயற்றிய விளக்கமுடைய அணிகலன்கள், மணி முதலிய தன்னால் கொண்டு வரப்பட்டவற்றை, தம் இல்லிடத் திணின்றும் பிரிந்து தமியராய் நீராடிய சிறுவர்களின் மென்மையான தலை முக்கியிடம் உள்ள முஞ்சம் என்னும் அணிகலனோடு சேரக் கொண்டு செவ்வரிகளுடன் கூடிய கண்களையுடைய மங்ககையர் தம் தம் காதல் துணை வருடன் ஒருங்கு கூடி நீராடுகின்ற மதுரையிடத்த நீர்த் துறையில் எல்லாம் வரும்.

மருதநில வயல்கள், மலர்களைச் சுமந்து பொலிந்த வையை நீர் புகுந்த நிறைதலால், இசை தோன்றுவதற்கு இட மான முழவு முதலிய இன்னியக் கருவிகளில் எழும் அலியை யும் பாட்டையும் கற்ற ஆடு மகளிர், கூத்தாடும் மகிழ்தற் குரிய நாளில் அமைக்கப்பட்ட கூத்தரங்கின் ஒப்பனை செய்யப்பட்ட அழகைப் போன்று விளங்கும்.பூம் பொழில்கள் தமக்கு விருந்து அளித்த இனிய வையை நீருக்குக் கைம் மாறாக எதிர் விருந்து அளிப்பவை போல் மேலும் மேலும் நெருங்கிய வண்டுகள் ஒலிப்பதற்குக் காரணமான பூந் தாது களுடன், நரந்தம்போல் மணம் கமழும் மலர்களை மிகவும்