பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 305

வையை ஆற்றின் இரண்டு கரைகளிலும் உள்ள பெரிய சோலையின் மணத்துக்கு மேலாக அந்த வையையின் வெம்மையால் தோன்றும்.வெங்கார் மணத்தை நுகர்வித்துக் குதுகுதுப்பான ஊர்கள் தோறும் அந்தப் புது நீர் வருகையை மக்களுக்கு உணர்த்துவதற்காகப் பறை ஒலித்தது. மதுரை நகரத்தில் உள்ள மக்கள் அந் நகரத்தின் உயர்ந்த மதிலிடத் தில் உள்ள சுருங்கையில் அந்த வையை ஆற்று நீர் புகுந்து ஒடியது. அப்போது ஏற்பட்ட ஒலியால் உறக்கம் நீங்கி எழுந்தனர். திண்ணிய தேரில் ஏற எண்ணுபவர் அவ் வண்டி யில் பூட்டுதற்குரிய எருதுகளைத் தேரில் பூட்டி அதில் ஏறிச் செலுத்தினர். வலிய குதிரைகளை அலங்கரித்தற்குரிய கலனை முதலியவற்றால் யானைகளை ஒப்பனை செய்தனர். சிலர் யானை குதிரை ஆகிய இவற்றை ஒப்பனை செய்யாமல் வறிதே ஏறிச் செலுத்தினர். பெண்டிர் அணிந்து கொள்ளும் இயல் புடைய மாலையை ஆராயாமல் ஆடவர் அணிந்து கொண்டனர். அப்படியே ஆடவர் அணிந்து கொள்வதற் குரிய மாலையைப் பெண்டிர் அணிந்து கொண்டனர். இப்படிப் புதுநீர் வருகையைக் காண்பதற்குத் தாங்கள் முந்திச் செல்ல வேண்டும் என்னும் ஆசையால் ஊரும் மரபும் அணியும் மரபும் மறந்து விட்டனர் மக்கள் எல்லாம்.

விளையாடும் பருவம் உடைய மகளிர் இழைத்த சிற்றில் அழகு செய்யும் வண்டுகள் மொய்க்கும் மணலால் ஆன கரையின் பிடரி அளவாக வந்த நீர்ப் பெருக்குப் போய் அணுகியது. முன்பு உரைத்தபடி முறை மறந்து அணிந்து கொண்டு முன்னால் சென்றவர் போக மற்ற மதுரை மக்கள் மாடங்களை யுடைய தெருவில் வந்தனர். போவதற்கு வழி பெறாமல் வருந்தினர்.

இங்ஙனம் அழகிய வையை ஆறு அம் மதுரைவாழ் மக்கள் விரும்பும் இயல்பு உடையதாயிற்று.

பூமாலை மேலும் மணம் பெறுதற்குப் புகை ஊட்டிய வகையால் சூடிய மகளிரும், மலர் மாலைகளை அணிந்து கொள்ளும் தொழிலாலும் அழகு மிகும் வகையால் அணிந்து கொண்ட மைந்தரும், பலவகையான மாலைகளை அணிந்த வரும், உச்சிச் சூட்டும் கண்ணியும், பெரிய வளையமுமாய்