பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 309

கள்வி அல்லேன். அறிவாய்! இவையே அல்லாமல் நின் காலில் உள்ள சிலம்புகளையும் எனக்குத் தரும் பொருட்டுக் கழற்றும் தன்மை உடையவன். அவனே கள்வன். அவனை நீ பிடிப்பாயாக’ என்று அப் பரத்தை உரைத்தாள்.

“ஆடவரை வசியப்படுத்தும் மான் போன்றவளே! நீ எதிர்த்தலைக் கைவிடுவாய். உம்மை விரும்பிய காமுகர் உமக்குத் தந்த பொருள்கள் உலகம் அறிய உமக்கு உரியவே ஆகும்” என்று ஒருத்தி இடையில் புகுந்து பரத்தையைச் சினம் தனியச் செய்தாள்.

“நங்கையே, உலக இயல்பை அறியாமல் அந் : சினவாதே பூங்கொடி போன்றவனே, ஆடவரின்கள் ‘திற்கக் கூடிய இடத்திலேயே நிற்கக் கூடிய ஒன்றோ? புன்ர்ச்சி இனிமை மிக்க பரத்தையரிடத்தே செல்லும், இயல்புடைய வன் ஒருவனைச் செல்லாமல் காத்தலும், சென்றான் என்று நீக்கி ஒழுகுவதும் அவனுடைய மனைவியிடம் கூடுவத்ோ? பண்புடைமை மிக்க மகளிர் தம்மைக் கணவர் இகழ்ந்த போதும் தாம் அவரை ஏத்தி வணங்குவர். தாம் காமத்தால் மயக்கம் அடைந்து பரத்தையரை விரும்பி அவரைச் சேர்ந்த ஆடவரின் மார்பை இனித் தழுவோம் என இருத்தல் குலமகளிர் எவர்க்கும் முடியக் கூடிய செயல் அன்று.” என்று அவள் தலைவியைத் தெளிவித்தாள். அங்ஙனம் தெளிவிக்க -

பூங்கொடி போன்ற அழகையுடைய மகளிரின் குவிந்த கை போலக் குவிந்த காந்தள் அரும்புகளும், பாம்பு சினந்து படம் விரிந்தாற் டோல் இதழ் விரிந்த காந்தள் மலரும், குடை விரிந்தாற்போல் விரிந்த காந்தாள் மலரால் சூழப்பட்ட சுனைகளினின்றும் கழிந்து கீழே விழுவனவாய நீர்ப்பூக்களும், மரக் கொம்புகளில் மலர்ந்த உதிர்ந்த பூக்களும், புதர்களில் மலர்ந்த மலர்களும் ஆகிய மலையினின்றும் வீழும் அருவி கொணர்ந்து தன்னிடம் சொரிந்த மலர்களை வையை ஆறு தன் அலைகளால் தள்ளிக் கொண்டு நீண்ட மாடங்களை யுடைய மதுரைக்குக் காப்பாய் அமைந்த மதிலில் உள்ள நெடிய பெரிய சுருங்கையூடே (குழாயிடத்தே) வந்து மிக்க நீரைச் சொரியும் போது அந்த நீர் கடிய விலங்காகிய யானை தன் கையை உயரத் தூக்கிக் கீழே விடும் நீரை ஒத்து விளங்கியது.