பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/311

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


310 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்

ஊடலும் கூடலும் தலைவியின் அச்சம் தங்குவதற்கு இடமான பிரிவும் ஆகிய இவற்றைக் காமத்தையும் கள்ளை யும் யாவரும் பாராட்டும்படி தாம் விரும்பின காதலரோடு அன்பால் நீராடும்படி முன்பு பிரிந்தவரைக் கூட்டுதல், மலர்கள் மிக்க இந்த வையை யாற்றுக்கு இயல்பாகும்.

உவமையற்ற வையை மாநிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் நாக நீள் மணி வரை நறுமலர் பல விரைஇ காமரு வையை சுடுகின்றே கூடல். நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி தார் அணி உவகை தலைக்கூடி ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி ஏர் அணி கொண்டார் இயல். கை புனை தாரினர் கண்ணியர் ஐ எனும் ஆவியர் ஆடையர் நெய் அணி கூந்ததர் பித்தையர் மெய் அணி யானை மிசையராய் ஒய்யெனத் தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்லப் பொங்கு புரவிப்படைப் போவோரும் பொங்கு சீர் வையமும் தேரும் அமைப்போரும் எவ் வாயும் பொய்யாம் போய் என்னாப் புடை கூட்டிப் போவநர் மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் ஆடுவார்பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு ஒடுவார் ஒடித் தளர்வார் போய் உற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக் கற்றாரும் கல்லாதவரும் கயவரும் பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும் பொற்றேரான் தானும் பொலம் புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை.