பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொகை - வகை - உரை : த. கோவேந்தன் & 311

துறை ஆடும் காதலர் தோள் புணையாக மறை ஆடுவாரை அறியார் மயங்கிப் பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் நிகழும் நிகழ்ச்சி எம்பால் என்று, ஆங்கே இகல் பல செல்வம் விளைத்தவட் கண்டு இப்பால் அகல் அல்கும் வையைத் துறை. காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு மற்று.அது தாதா என்றாளுக்குத் தானே புறன் தந்து வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இச் செவ்வி போதல் உண்டாம்கொல் அறிந்து புனல் புணர்த்தது ஒஒ பெரிதும் வியப்பு. கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை நயத் தகு நல்லாளைக் கூடுமா கூடும் முயக்குக்குச் செவ்வி முலையும் முயக்கத்து நீரும் அவட்குத் துணை கண்ணின் நீர் விட்டோய் நீயும் அவட்குத் துணை. பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் மணி எழில் மா மேனி முத்த முறுவல் அணி பவளச் செவ் வாய் அறம் காவல் பெண்டிர் மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித் தணிவின்று, வையைப் புனல்.

புனலூடு போவது ஒர் பூ மாலை கொண்டை எனலூழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து என ஆங்கு ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப் வார்ப்பார் ஒழிந்தார் படிவு.