பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

39


74. வானிருந்த மயில்தோகை

விசும்புஇழி தோகைச் சீர் போன்றிசினே - பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக், கரை சேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே. - ஐங் 74 “பசும் பொன்னால் ஆன அணிகலன்கள் மெல்ல ஒளிவீசக் கரையில் நின்ற மருத மரத்தின் மீது ஏறி விளை யாடிய இவளது குளிர்ந்த நறுமணம் வாய்ந்த கூந்தல் வானினின்று இறங்கும் தோகைமயிலின் தோற்றத்தை ஒத்திருந்தது” என்று தலைவன் தலைவி கேட்பத் தோழிக்குச் சொன்னான்

75. பழி கூறத் தொடங்கிற்று ஊர் பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந - அதனால், அலர் தொடங்கின்றால் ஊரே - மலர தொல் நிலை மருதத்துப் பெருந் துறை நின்னோடு ஆடினள், தண் புனல் - அதுவே - ஐங் 75 தோழி தலைவனை நோக்கி, “மகிழ்ந, பூக்களை யுடைய பழமையான நிலைமையுடைய மருத மரங்கள் செறிந்திருந்தும் பெருந்துறையில் ஒருத்தி நின்னுடன் புனலாடினாள் ஆடவும் அதை நீ எமக்கு முன் ஒப்புக்கொள்ளாமல் மறைத்தாலும் நின்னை அங்குக் கண்டவர் இவ் ஊரில் பலர் எனவே, ஊர் அலர் கூறத் தொடங்கியது இனி நீ மறைப்பதில் பயன் ஏதும் இல்லை” என்றாள்.

76. இளையாள் புனலாடினாள்! பஞ்சாய்க் கூந்தல், பசு மலர்ச் சுணங்கின் - தண் புனல் ஆடித், தன் நலம் மேம்பட்டனள் - ஒண் தொடி மடவரல், நின்னோடு, அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. - ஜங் 76 தோழி, “தண்டான் கோரையைப் போல் கூந்தலும், பசிய பூப்போலும் சுணங்கும் ஒளியுடைய தொடியும் உடைய இளையாள் பரத்தை ஒருத்தி, நின்னுடன் குளிர்ந்த புனலாடினாள் அதனால் வான் மகளிரும் வணங்குதற்குரிய