பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

59


117. துயில்வதற்குரிய நாள்கள்

அளில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கணி குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கது.உம் தண் துறை ஊரன் பெண்டினை ஆயின், பல ஆகுக, நின் நெஞ்சில் படரே! ஒவாது ஈயும் மாரி வண் கைக் கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி கொன் முனை இரவு ஊர் போலச் சில ஆகுக நீ துஞ்சும் நாளே. - ஒளவையார் குறு 91 “நெஞ்சேமே! ஒன்றோடு ஒன்று பிணங்குதலை உடைய பிரப்பம் கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை ஆழமான நீரையுடைய குளத்திலுள்ள கெண்டை மீன்கள் கவ்வுதற்கு இடமாகிய குளிர்ந்த நீர்த்துறைகளை உடைய ஊர்த் தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பா யானால் நின் உள்ளத்தில் துன்பம் அதிகம் ஆகும். காலமும் இடமும் பெறுவார் தகுதியும் நோக்கிப் பொழியாமல் எப் பொழுதும் கொடுக்கும் முகில் போன்று கைம்மாறு கருதாத வண்மையை உடைய கையினையும்,விரைந்த செலவையும் உடைய ஆண் யானைகளையும் உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியின் அச்சத்தைத் தரும் போர்க் களத்தில் உள்ள இரவை என்னும் ஊரில் உள்ளார்போல நீ துயிலும் நாள்கள் சிலவே ஆகுக” என்று தலைவி யுரைத்தாள்.

18. அன்னையும் அத்தனும் ஒத்தவன்! நல் நலம் தொலைய, நலம்மிகச் சாஅய், இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? புலவி அஃது எவனோ அன்பிலங்கடையே?

- அள்ளூர் நன்முல்லையார் குறு 93 “தோழியே! நல்ல பெண்மைநலம் கெடவும் உடல் மிக மெலியவும் இனிய உயிரானது நீங்குமாயினும் அவர்பால் பரிவுகூர்ந்த சொற்களைச் ச்ொல்லுதல் வேண்டா. தலையர்